Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 24.02.2024

இன்றைய தியானம்(Tamil) 24.02.2024

 

சிறிய பெலனுள்ள பலசாலி

 

"…உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ:…" - நியா. 6:14

 

மூன்று வாலிபர்கள் தங்கள் தோளில் வைக்கப்பட்ட சிலுவையை சுமந்து கொண்டு, நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒருவன் தன் சிலுவை மிக கனமாக இருக்கிறதென்று அதன் நீளத்தைக் குறைத்தான். இரண்டாவது வந்தவனும் அப்படியே செய்தான். கொஞ்ச தூரம் போனால் ஒரு பெரிய பிளவு இருந்தது. அந்தப் பிளவை கடக்க என்ன செய்ய என்று யோசித்து திகைத்துக் கொண்டிருந்தனர் முதல் இரண்டு நபர்கள். மூன்றாவது நபர் வந்தார் தன் தோளிலுள்ள சிலுவையை அந்தப் பிளவின் மேல் வைத்தார். அது ஒரு பாலம் போல மாறியது. எளிதாக அதைக் கடந்து போனார். இருவரும் சிந்தித்தனர். தேவன் நமக்கு நியமித்த சிலுவையை சுமக்கத் தயங்கின தங்களது மதீயினமான செய்கையை எண்ணி வருந்தினர்.  

 

வேதத்தில் 1 சாமுவேல் 6ம் அதிகாரம் 7 ,8 வசனங்களில் வாசிக்கிறோம். கர்த்தருடைய பெட்டியை சுமக்கும் படி நுகம் பூட்டாதிருக்கிற பழக்கமில்லாத பசு தன் கன்று குட்டிகளை விட்டு விட்டு பெட்டியை சுமந்து யோசுவாவின் வயலுக்கு வலது இடது புறம் சாயாமல் நேராக சென்றதே! பின்பு தன்னையே பலியாக கொடுத்ததே! தன் கன்றுகுட்டியின் நிலையை எண்ணி பின்னிட்டு பார்க்கவில்லை. இந்த பெட்டியை சுமக்க முடியுமா? நமக்கு பழக்கமில்லை என நின்ற இடத்திலேயே நிற்கவில்லை. ஐந்தறிவு மிருகம் தேவனின் பெட்டியை சுமக்குமானால் அபிஷேகத்தை, வல்லமையை பெற்றுக் கொண்ட நாம் ஏன் சிலுவையை சுமந்து சிலுவையின் மேன்மையை, இயேசுவின் அன்பை பிறருக்கு சொல்லக்கூடாது?

 

இதை வாசிக்கின்ற அன்பான சகோதர சகோதரிகளே! உங்களுக்கு இருக்கும் சிறிய பெலன் போதும் தேவன் உங்களுக்கு நியமித்த காரியம் உங்களுடைய பார்வைக்கு பாரமானதாக தோன்றலாம். நம்முடைய ஞானத்தால் அதை குறைத்து இலகுவாக்கிவிடலாம் என யோசிக்கலாம். ஆனால் தேவன் நியமித்ததுதான் நமக்கு ஆசீர்வாதம். நுகம் பூட்டப்படாத பசு தன் மேல் வைக்கப்பட்ட கர்த்தருடைய பெட்டியை இறுதிவரை சுமந்து தன் வேலையை முடிக்குமானால், நம்முடைய சிந்தை எப்படி இருக்க வேண்டும் சிந்தித்துப் பார்ப்போம். தேவன் உங்கள் மேல் வைத்த சிலுவையை முறுமுறுப்பின்றி சுமந்து தேவசித்தத்தின்படி இவ்வுலகத்தில் வாழ்வோம்.

- Mrs. பூவிதா எபிநேசர்

 

ஜெபக்குறிப்பு:

நமது வளாகத்தில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனையில் Online மற்றும் ஆமென் வில்லேஜ் டிவி மூலம் பங்கு பெறுபவர்கள் அற்புத சுகம் பெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)