Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 18-08-2022

இன்றைய தியானம்(Tamil) 18-08-2022

 

நாம் திருடர்களா?

 

“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.” - எபேசியர் 5:16

 

இன்றைய காலகட்டத்தில் நாம் செல்லும் இடங்களிலுள்ள இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்து அதை தனது You Tube, Facebook, Whats App-ல் பகிர்ந்து கொள்வது வழக்கமாகி விட்டது. ஒருநாள் 80 வயது நிரம்பிய ஒருவர் சிம்லாவிற்குச் செல்ல வேண்டுமென்று தனது நண்பர்களுடன் டிக்கெட் பதிவு செய்துகொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சைப் பிடித்தவராய் கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சையும் பரிந்துரைக்கப்பட்டு நடந்தும் முடிந்தது. அதற்கான கட்டணம் ரூ.8 லட்சம் சொல்லப்பட்ட போது அதைப் பார்த்த அவரது கண்களில் இருந்து கண்ணீர்! ஏன் என்று கேட்டபோது “80 ஆண்டுகள் ஒரு ரூபாய் கூட வாங்காமல் செயல்பட வைத்த கர்த்தருக்கு நன்றியோ, காணிக்கையோ கொடுக்காத திருடன் நான்.” என்றார்.

 

வேதத்திலே பிலி.2:4 –ல் “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” என்று சொல்லியிருக்கிறபடி, நம்முடைய நேரத்தையோ, பணத்தையோ, பிறருக்காக நாம் செலவுசெய்யும்போது ஏதாவது ஒரு வகையில் நாம் மற்றவர்களுக்கு ஊழியம் செய்கிறோம். மாற்கு 10:45-ல் “அப்படியே மனுஷ குமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்று வாசித்த நாம், கர்த்தருக்கென்று ஊழியஞ்செய்யவும், அநேகரை அவரின் மீட்பிற்கு நேராக வழிநடத்துபவர்களாக நம்மையும் நம்மிடமுள்ளதையும் செலவு செய்ய ஆயத்தமா? இல்லாத பட்சத்தில் நாம் தேவனுக்குரியதை திருடுகிறவர்களாக காணப்படுவோம்.

 

பிரியமானவர்களே, காலம் பொன் போன்றது என்பார்கள். புரளி பேசினால் நம்முடைய நேரம் திருடப்படும், டி.வி.யில் நம்முடைய நேரம் திருடப்படும், செல்ஃபோனைத் திறந்தால் நேரம் திருடப்படுவது தெரியாமலே திருடு போய்விடுகிறது. யோவான்.10:10- ல் திருடன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் என்று வாசிக்கிறோம். ஏதோ திருடன் நம் வீட்டிற்கு வந்து நம் உடைமைகளைத் திருடினால் நாம் பதட்டமடைகிறோம். ஆனால் நம்மை அறியாமல் நமது நேரம் திருடப்படுவதை எண்ணி நாம் ஜாக்கிரதையாக இருந்து, காலத்தைப் பிரியோஜனப்படுத்துவோம்.

 

சமுதாயத்தில் அநேகருக்கு உதவுவோம், ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அன்பைப் பறைசாற்றுவோம்!

- Mrs.அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு:

உலகத்தைக் கலக்குகிற 120 மிஷனெரிகளை உருவாக்கத் திட்டமிட்டபடி 60 மிஷனெரி வீடுகள் கட்டி முடிக்கப்பட, தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)