Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 15-08-2022 (Youth Special)

இன்றைய தியானம்(Tamil) 15-08-2022 (Youth Special)

 

பாதுகாப்பான விடுதலை 

 

“...உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.” - நீதி. 6:3

 

வேணியின் அப்பா ஒரு புது வீடு கட்டினார். அவ்வப்போது வீடு கட்டுவதை பார்க்கச் செல்லும் அப்பாவுடன் 11ம் வகுப்பு படிக்கும் வேணியும் செல்வாள். அப்போது மிகவும் Socialஆக பழகும் எதிர்வீட்டு ராணியை வியந்து பார்த்துக்கொண்டே இருப்பாள். புது வீட்டில் குடியேறியதும் இருவரும் நண்பர்களாயினர். வேணியின் பழக்கவழக்கங்கள் மாறின. எப்போதும் ராணியைத் தேடி செல்வது, ராணியுடன் கடைக்குச் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது என இருந்தாள். ஒருநாள் வேணி பள்ளியில் ஒரு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அருகில் உள்ள வேறொரு பள்ளிக்குச் செல்ல வேண்டியதாயிருந்தது. வேணியின் அப்பா அந்தப் பள்ளியில் கொண்டு வந்து விடுவதாகச் சொன்னார். ஆனால் வேணியோ அழுது அடம்பிடித்து ராணியுடன் சென்றாள். செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி இருவரும் மரித்தனர். 

 

வேதத்திலும் தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்க புறப்பட்டாள். அப்பொழுது சீகேம் என்னும் வாலிபன் அவளைத் தீட்டுப்படுத்தினான். அதனால் நேர்ந்தது என்ன? அவளது சகோதரர்கள், சீகேமையும் அவன் குடும்பத்தையும் மட்டுமல்லாமல் அந்த கிராமம் முழுவதையும் அழித்தனர். ஒரு பெண்ணின் சிறிய தவறினால் ஒரு கிராமமே அழிந்தது. இதுபோன்ற நிகழ்வுகள் இன்றும் நடப்பதை நாம் காண முடிகின்றது. தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ செல்லும் வாலிபப் பிள்ளைகள் தவறான காரியங்களில் சிக்கிக்கொள்வதை நாம் பார்க்கிறோம். எத்தனையோ பேர் தங்களது வாழ்வையே தொலைத்து விடுகின்றனர். பெற்றோரின் அறிவுரைகளைத் தள்ளி, அவர்களின் பாதுகாப்பை வெறுக்கும் பிள்ளைகளே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெண்களின் தவறு மட்டுமல்ல; ஆண் பிள்ளைகளுக்கும் சக தோழிகளை எப்படி நடத்தவேண்டும் என நாம் போதிக்க வேண்டும். சீகேமிற்கு இதை அவர்கள் பெற்றோர் போதித்திருந்தால் இது நேர்ந்திருக்காதோ என்னவோ? மாறாக அவன் தகப்பனும் அவனுக்கு உடன்பட்டதே அழிவின் பெரும் காரணம்.

 

எனக்கன்பான தங்கைகளே, என்னதான் நாம் கூறினாலும் நம் சமுதாயம் இன்னும் அத்தனை பெரிய மாற்றத்திற்கு தயாராக இல்லை. எனவே நம்மை நாமே பாதுகாப்பதுதான் புத்திசாலித்தனம். பெற்றோரின் பாதுகாப்பை தவிர்க்கும்போது நம்மை நாமே ஆபத்திற்குள் தள்ளிவிடுகிறோம். நம் இஷ்டப்படி வாழ்வதே சுதந்திரம் என நினைக்கிறோம். அதுவல்ல கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரமே உண்மையான பாதுகாப்பான சுதந்திரம். எனவே நயவஞ்சகமான சீர்கேடான இவ்வுலகின் கண்ணிக்கு நம்மைப் பாதுகாக்க, நம் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, அவர்களின் பாதுகாப்பை நாடும்போது நிச்சயம் பரலோக தேவதூதர்களின் பாதுகாப்பையும் நாம் பெற்று பரிசுத்த வாழ்க்கை வாழ முடியும்.அல்லேலூயா!

 

HAPPY INDEPENDENCE DAY

 

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு:

நம்பிக்கை டிவி, சத்தியம் டிவி மற்றும் லோக்கல் சேனல்களில் வெளிவரும் “கிராமிய நேரம்” நிகழ்ச்சியின் மூலம் அநேகர் பயனடைய ஜெபியுங்கள்.

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)