Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 09-08-2022

இன்றைய தியானம்(Tamil) 09-08-2022

 

நேரத்தை விரையமாக்குதல்      

 

“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” - எபேசியர் 5:16    

 

ஒரு ராஜா தன் நாட்டில் வாழ்ந்த ஏழைக்குடியானவனிடம் அரண்மனை கஜானாவின் சாவியைக் கொடுத்து “இன்று இரவு துவங்குவதற்கு முன் உனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்” என்று கூறினார். இந்த மனிதனும் மிகுந்த மகிழ்ச்சியோடு தன் இல்லத்திற்கு சென்று மனைவியிடம் இவ்விஷயத்தைப் பகிர்ந்து கொண்டான். மனைவியும், “உடனே சென்று எடுத்து வாருங்கள்” என்று கூறினாள். ஆனால் அந்த மனிதனோ, “என்னால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை. அறுசுவை உணவு வகைகளை எனக்கு சமைத்து கொடு” என்று கூறினான். சாப்பிட்ட பின்பு “சற்று நேரம் உறங்கி விட்டு பின் செல்கிறேன் “என்று கூறிவிட்டு தூங்கி விட்டான். அவன் கண்விழித்து பார்த்தபோது மாலை வேளையாகிவிட்டது. வேகமாக நடந்து அரண்மனைக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் மாமரத்தைப் பார்க்கவே அந்த மரத்தினருகே சென்று மாங்கனிகளைப் பறித்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். இறுதியில் அவன் அரண்மனையை சென்றடைவதற்கு முன் இருட்டிவிட்டது. அவசர அவசரமாக அரண்மனைக்குள் நுழைந்தவனைப் பார்த்த ராஜா, “உனக்குக் கொடுக்கப்பட்ட நல்ல வாய்ப்பை நீ இழந்துவிட்டாய்” என்று கூறி அவனை வெளியே அனுப்பிவிட்டார்.

 

மனிதனுக்கு தேவன் கொடுத்த சிறந்த பரிசுகளில் ஒன்று நேரம். பல சமயங்களில் நமக்குக் கொடுக்கப்பட்ட நேரங்களை விரையமாக்கி ஆசீர்வாதங்களை இழந்துவிடுகிறோம். நம் வாழ்வில் பொன்னான நேரத்தை விரையமாக்குகிற சில காரியங்களைக் குறித்து சற்று தியானிப்போம்.

 

1. சக மனிதரிடமிருந்து Inspiration-ஐ எதிர்பார்த்து External காரியங்களுக்காக Wait பண்ணி நேரத்தை வீணடிப்பது.

 

2. பிறர் நம்மைக் குறித்து என்ன நினைப்பார்களோ என்று சிந்தித்து நேரத்தை வீணடித்து காரியங்களைச் செய்யாமல் இருப்பது.

 

3. தடையாக உள்ள காரியங்களையோ (அ) சூழ்நிலைகளையோ குறையாகக் கூறி கொண்டே இருப்பது.

 

4. பிறரோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து நேரத்தை வீணடிப்பது. 

 

5. ஒருமுறை தவறுவது என்பது இயல்பான காரியம். ஆனால் செய்த தவறுகளையே திரும்ப திரும்ப செய்வது.

 

6. நம் வாழ்வை முன்னேற்றுகிற காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவற்றை தள்ளிப்போட்டு தேவையற்ற காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீணடிப்பது.

 

7. தோல்விகளைக் கண்டு துவண்டு, வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்லாமல் சோர்ந்து போவது.

 

பிரியமானவர்களே! அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியருக்கு எழுதின நிருபத்தில் (எபே.5:16), “நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறுகின்றார். நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த சமுதாயத்தில் நேரத்தை விரையமாக்குவதற்கான காரியங்கள் கணக்கிலடங்காதவைகளாய் இருக்கின்றது. இவைகளுக்கு நாம் விலகி கர்த்தருக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தை அவருக்குக் கொடுத்து, அவர் பாதத்தில் அமர்ந்திருந்து செயல்படும்போது, உலக காரியங்களிலும் நாம் சோர்ந்து போகாமல் ஞானமுள்ளவர்களாய் வாழ்வின் அடுத்த நிலைக்கு நாம் முன்னேறிச் செல்ல முடியும். அனுதினமும் கர்த்தர் நமக்குக் கொடுக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஆசீர்வாதமான வெற்றி வாழ்க்கை வாழலாம்.

- Mrs.ஜெபக்கனி சேகர்

 

ஜெபக்குறிப்பு:

1 இலட்சம் கிராமங்கள் சந்திக்கப்பட, 7000 மிஷனெரிகளைக் கர்த்தர் எழுப்பித் தர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)