Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 07-08-2022 (Kids Special)

இன்றைய தியானம்(Tamil) 07-08-2022 (Kids Special)

 

Jesus கிட்ட டிப்ஸ் கேளு 

 

“நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்;...” – சங்கீதம் 4:4

 

தொடர்ந்து Children’s Special மூலமாக உங்களைச் சந்திப்பதில் ரொம்ப, ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு சந்தோஷமா? பலமடங்கு Happy – யா? Very good, very good. நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது நடந்த சம்பவத்தை உங்களோட Share பண்ணப்போறேன். என்ன குட்டீஸ்! கேட்க ரெடி தானே!

 

நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது பல்லாங்குழி, Cup-Ice, கோலிக்குண்டு இப்படி நிறையா விளையாட்டுகள் விளையாடுவோம். என்ன, உங்களுக்கு இந்த விளையாட்டுக்களெல்லாம் தெரியாது. அப்படித்தானே? உங்களுக்கு Video Games, TV, Lap Top, Computer, Cell Phone இதில் தானே விளையாடத் தெரியும் இல்லையா? ரொம்ப நேரம் விளையாடி கண்ணைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது, சரியா? ஓடிப்பிடித்து குதித்து விளையாடினா Health – க்கு ரொம்ப நல்லது. சரி, நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்கன்னு கேக்கிறீங்களா? Ok ... Ok.... சொல்றேன்... நாங்க 7 பேர் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தோம். ஒளிந்து பிடிச்சு (Cup-Ice) விளையாட்டு ரொம்ப ஜாலியா போய்க் கொண்டிருந்தது. தீடிரென்று செல்வி-ன்னு ஒரு பெண் குளோரியோட முகத்தில் நல்லா கிள்ளி வச்சுட்டா. “என்ன நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். என்ன மட்டும் One Ice சொல்லிட்டே இருக்க. அதுதான் வேகம் வந்துச்சு” என்று சொல்லிட்டு வீட்டுக்கு ஓடியே போயிட்டா. கன்னத்தில் நகம் பட்ட காயத்தோடு அழுதுகொண்டே போனாள் குளோரி. நாங்களும் பாதுகாப்பு பட்டாளம்போல 5 பேரும் பின்னாடியே போனோம்.

 

குளோரியின் அம்மாவுக்கு வந்தது பாருங்க கோபம்! நேரா செல்வி வீட்டுக்குப் போக, இரண்டு அம்மாமார்களுக்கும் சண்டை ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் இரண்டு பேருடைய சொந்தக்காரர்களும் மோதித் தெரு சண்டையாக மாறிவிட்டது. தூரத்துல பார்த்துக்கிட்டிருந்த நாங்க அஞ்சு பேரும் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடினோம். சின்னக் கோபம் எவ்வளவு பெரிய தீங்கை உண்டாக்கிவிடுகிறது. செல்வியும், குளோரியும் அடுத்த நாளே சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அவர்களின் குடும்பம் பல நாள்கள் பகையாகவே இருந்தது. கோபம் எல்லோருக்கும் வருவது இயற்கைதான். ஆனால் நிதானத்தை இழந்துவிட கூடாது. அப்பொழுது கோபத்தினால் வரும் விளைவுகளை சந்திக்காமல், கோபம் தணிந்து சந்தோஷமாய் வாழ ஆண்டவர் உதவி செய்வார்.

 

என்ன குட்டிச் செல்லங்களே, உங்களுக்கும் கோபம் வருமா? பாத்தா நல்ல பிள்ளைகளா இருக்கீங்களே. கோபப்பட்டாலும் பாவம் செய்யக்கூடாது. அதாவது கோபத்தில், அடிக்கவோ, பொருளைத் தூக்கி எறியவோ கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக கோபத்தை அடக்கி ஆள Jesus கிட்ட நிறைய Tips இருக்கு. Daily அவர்கிட்ட கேட்டு பெற்றுக்கொள்ள மறந்துவிடாதேயுங்கள்! Bye குட்டீஸ்.

- Mrs.மணி

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)