Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 03-08-2022

இன்றைய தியானம்(Tamil) 03-08-2022

 

தவறான நடத்தை 

 

“கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.” - நாகூம்1:7

 

19-ம் நூற்றாண்டில், இந்தியாவில் மிக முக்கிய சமூக சீர்கேடாக தேவதாசிமுறை காணப்பட்டது. கோவில்களில் தங்களது பெண் குழந்தைகளை நடனமாடவும் தாசிகளாக வேலை செய்யவும் மிகுந்த பக்தி வைராக்கியமுள்ள பெற்றோர்கள் விட்டுவிட்டனர். கோவில்களிலேயே தாசித் தொழில் செய்யத் தங்கள் பிள்ளைகளை விட்டுவிட்டால் அது கடவுளுக்குப் பிரியம் என்றும் தங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்றும், அந்தப் பிள்ளைகளுக்கு “தேவதாசிகள்” என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இந்த அவல நிலைக்குக் கட்டாயப்படுத்தித் தள்ளப்பட்ட பெண்கள் ஏராளம்.

 

இப்படிப்பட்ட தலைமுறையினரை மீட்கவோ, ஆதரவு கொடுக்கவோ முன்வராதவேளை. அவ்வேளையில் ஏமி கார்மைக்கேல் அம்மையார் அயர்லாந்து நாட்டை விட்டு 1895ம் ஆண்டு இந்தியாவை நோக்கி இச்சீரழிவைத் தடுக்க சீற்றத்துடன் புறப்பட்டார். சிறுமிகள் மற்றும் பெண்கள் நாடக கம்பெனிக்கு விலைக்கு விற்கப்பட்டனர். இத்தகைய ஒழுக்கமற்ற வாழ்வைத் தடுக்க 1926ம் ஆண்டு ஏமி கார்மைக்கேல் டோனாவூர் ஐக்கியத்தை நிறுவினார்.

 

திக்கற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், ஒழுக்கக் கேடடைந்தோர் ஆதரவற்றோர் போன்றோருக்கு புகலிடம் தந்து அவர்களுக்குக் கிறிஸ்துவின் அன்பை செயல் வடிவில் காட்டினார். இந்த அமைப்பை “நட்சத்திரக் கூட்டம்” என்று அழைத்தார். இன்றும் டோனாவூர் ஐக்கியம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வளித்து வருகிறது.

 

இன்றும் சேரியிலும், ஏழ்மை நிலையிலும் வாழ்ந்த பெண்கள் தங்கள் வறுமையைப் போக்க, குடும்பத்தை நடத்த விபசாரத்தைத் தண்ணீரைப் போல பருகிறார்கள். நான் பணிபுரிந்த அரசாங்கப்பள்ளியில் 3 பிள்ளைகளைத் தவிக்க விட்டுவிட்டு வேறு ஒரு கணவனைத் தேடிய தாயை அறிவேன்! மற்றொரு குடும்பத்திலே தங்களது இரண்டு பிள்ளைகளை வயதான தாயிடம் விட்டுவிட்டு ஆளுக்கொருபுறம் சென்றுவிட்ட பெற்றோர்! இப்படிப்பட்ட பிள்ளைகள் இரவும் சாப்பிடாமல், காலையிலும் சாப்பிடாமல் மதியம் ஒருவேளை மட்டும் பள்ளி மதிய உணவை ஆர்வத்தோடு உண்ணும் பரிதாப காட்சி! கவனிப்பாரற்று பரட்டைத் தலையுடனும், அழுக்கு ஆடையுடனும் வரும் பிள்ளைகளைக் கண்டு வேதனை அடைந்திருக்கிறேன்.

 

பாவிகளை மீட்கவே உலகத்தில் மனிதனாகத் தோன்றிய இயேசுபிரானும் விபசாரத்தில் கையும் மெய்யுமாய் பிடிபட்ட ஸ்திரீயையும் மன்னித்து “இனிப் பாவம் செய்யாதே” என்றார். கிறிஸ்தவத்தின் முக்கியப் பண்பாகிய மன்னிப்பு நம் ஒவ்வொருவரிடமும் உள்ளதா?

- Mrs.ஜாஸ்மின் பால் 

 

ஜெபக்குறிப்பு:

மிஷனெரிப் பிள்ளைகளின் படிப்பிற்காக, பணத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)