Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 17-07-2022

இன்றைய தியானம்(Tamil) 17-07-2022

 

ஜெரியின் சந்தோஷம்

 

“தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை... தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” - யோவான் 3:16

 

Hai குட்டீஸ்! சந்தோஷமா இருக்கீங்களா? உங்களுடைய friends கூட விதவிதமாய் பொம்மைகள் வைத்து விளையாடும்போது ரொம்ப சந்தோஷமாய் இருப்பீங்க தானே! 

 

இன்றைக்கு ஜெரி எப்படி சந்தோஷமாக இருக்க கற்றுக் கொண்டான் என்று பார்ப்போமா? ஜெரியை செல்சியின் வீட்டில் விட்டுவிட்டு, அவனது அம்மாவும்- அப்பாவும் ஒரு இடத்திற்குச் சென்றனர். அவனும் செல்சியும் Teddy Bear –யும், Car-யும் வைத்து மிகவும் பிரியமாக விளையாடினர். ஜெரியை அழைத்துச் செல்ல அவனது அம்மா- அப்பா வந்தவுடன் செல்சியின் teddy bear மற்றும் Car – உடன்தான் தன் வீட்டிற்கு வருவேன் என்று அடம்பிடித்தான். ஜெரியின் அம்மா அவன் கவனத்தை திருப்பும் படி “ஜெரி Walking போய்விட்டு இதனை எடுத்துச் செல்லலாம்” என்று கூறினார்கள். உடனே அவைகளை வைத்துவிட்டு அம்மா- அப்பாவுடன் சந்தோஷமாக Walking கிளம்பினான். 

 

அவர்கள் சென்ற இடத்திலுள்ள வீடுகள் மிகவும் சிறியவைகளாக இருந்தன. அங்குள்ள குட்டீஸ், தங்களிடம் உள்ள உடைந்த பொம்மைகள், பழைய Ball, ஓடாத பழைய Cycle –களைக் கொண்டு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அழுது கொண்டிருந்த குட்டி பாப்பாவிடம் எனது “ஏரோப்ளைன் பொம்மையை வைத்து விளையாட வருகிறாயா?” என்று சொல்லி. ஒரு தம்பி தனது சக்கரம் உடைந்த பொம்மையை கொடுப்பதைப் பார்த்தவுடன் ஜெரிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜெரி அம்மாவிடம், “நான் இனி அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன். இந்த சிறுவர்கள் தங்களிடம் உள்ள உடைந்த பொருட்களை வைத்து சந்தோஷமாக விளையாடுகிறார்கள். நானும் என்னிடமுள்ள பொம்மைகள் சிலவற்றை நாளைக்கு வந்து இவர்களிடம் கொடுப்பேன்” என்று கூறினான்.

 

என்ன குட்டீஸ்! நீங்களும் அடுத்தவர்களிடம் உள்ள பொருள்களுக்கு ஆசைப்பட மாட்டீங்கதானே! உங்களிடம் உள்ள பொம்மைகளை மற்ற குட்டீஸ்களிடம் கொடுத்து விளையாடும்போதுதான் சந்தோஷமாக இருக்கும். இயேசப்பாவும் நாம் சந்தோஷமாக இருப்பதற்கு தன்னையே நமக்காகக் கொடுத்தாங்க இல்ல... Ok...bye...

- A.பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)