Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13.07.2024
Share:

By Village Missionary Movement

Saturday, 13-Jul-2024

இன்றைய தியானம்(Tamil) 13.07.2024

 

கர்த்தரின் கண்கள்

 

“உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” - சங்கீதம் 32:5

 

ஒரு வாலிபன் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றான். அங்கு நண்பர்களின் வற்புறுத்தலால் குடும்பத்தினர் தூரத்திலிருப்பதாலும் குடிப்பழக்கத்திற்கு உள்ளானான். வீட்டிற்கு பணம் அனுப்ப மறந்தான். தன் கையில் உள்ள பணத்திற்கெல்லாம் குடித்து வறுமைக்குத் தள்ளப்பட்டான். நண்பர்கள் மகா குடிகாரன் என பேசி விலகிச் சென்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டான். உதவி செய்ய நண்பர்கள், உறவினர்கள் இல்லை. தனக்கு உதவி செய்ய யாருமில்லையே என நினைத்தான். ஆனால் கர்த்தரின் கண்கள் அவனைக் கண்டது. தற்கொலை செய்ய நினைத்த அவனை இயேசு சந்தித்து மறுவாழ்வு அளித்தார்.  

 

இந்த உலகில் வாழும் மனிதர்களின் பார்வை, பார்க்கும் விதங்கள் என பலவகை உண்டு. ஆனால் ஆண்டவர் நம்மைப் பார்ப்பது நம்மை வாழ வைக்க! நம் கர்த்தரின் கண் ஆலோசனை தரும் ஆச்சரியமான கண்களாய் இருக்கின்றன. அவை மனதுருக்கம் நிறைந்தவை. எவ்விடத்திலும் சுற்றி உலாவும் கண்கள். அவரின் கண்களுக்கு மறைவாய் எங்கும் செல்ல முடியாது. இருளில் இருப்பதுபோல இருந்தாலும் அவர் நம்மேல் தம் கண்ணை வைத்து சரியான பாதை செல்ல உதவுவார். அக்கினி ஜுவாலையைப் போன்ற பிரகாசம் உள்ள கண்கள். மேலும் நம் தேவன் எவ்வித பட்சபாதமும் பாராதவர். நாம் எப்படியிருந்தாலும் எந்நிலையிலிருந்தாலும் உங்கள் நிலையை மாற்றவல்லவர். அவர் ஒருவரே நாம் தவறான வழியில் செல்லாமல் நேர்வழியில் நடக்க போதித்து நடத்துபவர். கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர். நான் உனக்கு போதித்து நீ நடக்க வேண்டிய வழியை காட்டுவேன்; உன் மேல் என் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவேன் என்று சொல்லும் தேவன்! 

  

பிரியமானவர்களே! மனிதர்கள் யாரும் பார்க்கவில்லையே, விசாரிக்கவில்லையே என்று கலங்காமல் கர்த்தருடைய கண்கள் நம்மேல் வைக்கப்பட்டிருக்கிறதே என்று சந்தோஷப்படுவோமாக! கர்த்தருடைய கண்கள் தம்முடைய சுகவீனங்களிலும், பலவீனங்களிலும், இக்கட்டிலும், நெருக்கத்திலிருந்தும் விடுதலையைப் பெற்றுத் தரும். நமக்கு தெய்வீக ஆலோசனை தந்து வழி நடத்துவதற்காக அவருடைய கண்கள் எப்போதும் நம்மேல் வைக்கப்பட்டிருக்கின்றன. நாமும் நம் மேல் கண்ணை வைத்து ஆலோசனை கொடுக்கும் தேவனுக்கு நேராய் நம் கண்களை ஏறெடுப்போமா? கருவறையில் நம்மை கண்ட கர்த்தரின் கண்கள் கல்லறை வரை நம்மை பாதுகாக்கும்.

- Sis. ஜாய் கிரேஸ்

 

ஜெபக்குறிப்பு:

ஆந்திரா மாநிலத்தில் நடைபெறும் ஆலய கட்டுமானப் பணிகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet