By Village Missionary Movement
Thursday, 04-Jul-2024இன்றைய தியானம்(Tamil) 04.07.2024
எதையும் செய்யக்கூடிய தேவன்
"…உம்மாலே செய்யக்கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுமில்லை" - எரேமியா 32:17
நியூசிலாந்து தேசத்தில் ஆக்லண்ட் பட்டணத்தில் ஐவர் டேவிஸ் என்பவரது வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவத்தைக் காண்போம். வாடகை வீட்டில் தங்கியிருந்த ஐவர் டேவிஸை வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டு ஓனர் சொல்லிவிட்டார். ஆனால் அடுத்த வாடகைவீடு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் பொருட்களை ஏற்றிச் செல்ல வண்டி வந்து விட்டது. எங்கே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டதற்கு பொருளை ஏற்றுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று ஜெபத்தோடு பொருட்களை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம் உடனே ஒரு நபர் வந்து ஒரு வீடு இருப்பதாக கூறினார். ஜெபத்திற்குப் பதில் கிடைத்த சந்தோஷத்தில் உற்சாகமாய் புதிய வீட்டிற்குச் சென்றார்.
வேதத்திலும் சாறிபாத் விதவை வீட்டில் காரியங்கள் எல்லாம் முடிந்து விட்டதைப் போன்ற சூழ்நிலை. கடைசியில் கொஞ்சம் எண்ணெய், கொஞ்சம் மாவு மாத்திரமே இருந்தது. ஆனாலும் தேவமனிதன் சொன்ன வார்த்தையை விசுவாசித்து முதலில் ஒரு அடையை அவருக்கு செய்து கொண்டு வந்து கொடுத்தாள். பஞ்சகாலம் முழுவதும் எண்ணெயும், மாவும் குறைந்து போகவில்லை. ஆச்சரியமாய் அவர்களைப் போஷித்தார்.
எனக்கு மிகவும் பிரியமானவர்களே! நம்முடைய வாழ்விலும் எல்லாம் முடிந்து விட்டது. என்னால் எதுவும் செய்ய முடியாது. பாதைகள் எல்லாப் பக்கங்களிலும் அடைபட்டு இருக்கிறது என்ற நிலையில் இருக்கிறீர்களா? தேவன் நம்முடைய வாழ்வின் கடைசி நொடியிலும் அற்புதம் செய்ய முடியும். ஆகவே தேவனை நோக்கிப் பார்ப்போம். அவர் மேல் விசுவாசத்துடன் இருப்போம். தேவன் நம்முடைய எல்லாக் காரியங்களையும் நேர்த்தியாய் நடத்துவார்.
உங்கள் வாழ்விலுள்ள குறைவுகள், தீர்க்கமுடியாத பிரச்சனைகள், முடிவுக்கு வராத கடன்கள், பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் என பலகாரியங்கள் உங்களை நம்பிக்கை இழக்கச் செய்யலாம். ஆனால் தேவன் மேல் நீங்கள் வைக்கும் எளிய விசுவாசம் நடக்க முடியாத காரியத்தை நடத்தி முடிக்கும். எனவே தேவனை உறுதியான விசுவாசத்தோடு பற்றிக் கொள்ளுங்கள். தேவன் பெரிய காரியங்களைச் செய்வார். அவ்வப்போது வரும் சோர்வுகள், கடினமான சூழ்நிலைகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். எல்லாவற்றையும் ஆண்டவர் ஒரே இராத்திரியில் மாறுதலாய் முடியச் செய்வார். கலங்காதீர்கள்.
- Mrs. அனிதா அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
ஆகஸ்ட் 15 ல் நடைபெறவிருக்கும் வாலிபர் முகாமின் Prayer card பெறுகிறவர்கள் ஏதாவது ஒருவகையில் தங்கள் பங்களிப்பைக் கொடுக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864