Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.07.2024
Share:

By Village Missionary Movement

Monday, 01-Jul-2024

இன்றைய தியானம்(Tamil) 01.07.2024

 

வரங்கள்

 

"விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளை பேசுவார்கள்" - மாற்கு 16:17

 

நான் ஊழியம் செய்ய ஆரம்பித்த புதிதில் ஒரு கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்த வழியில் வயதான தாயார் சுலகில் எதையோ புடைத்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று அலைக்கழிக்கப்பட்டு கீழே விழுந்தார்கள். அவர்களுக்குள் இருந்த பிசாசு அலறி அடித்துக் கொண்டு ஓடியது. நான் அவர்கள் தலையில் கை வைத்து ஜெபிக்கவுமில்லை. அதற்கு முன் அந்த தாயாரைக் குறித்து எதுவும் தெரியாது. ஆனாலும் நான் நடந்து செல்லும் போது ஆவியானவரே கிரியை செய்தார் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது.

 

வேதத்தில் ஆதி அப்போஸ்தலர்களுடைய நாட்களில் நடந்த அற்புதம், அதிசயங்களை நாம் வாசிக்கிறோம். அவர்களுடைய கைகளினாலே அநேக அடையாளங்களும், அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. மேலும் பிணியாளிகளைப் படுக்கைகளில் மேலும் கட்டில்களின் மேலும் கிடத்தி பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். பிரத்தியட்சமான அற்புதங்கள் நடந்தது. வரங்கள் வெளிப்பட்டன.  

 

இயேசு கிறிஸ்து பரமேறுமுன் புறப்பட்டுப்போய் சகல ஜனங்களையும் சீஷராக்கி பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுங்கள் என கட்டளையிட்டார். ஆகவே அவர் செய்த நன்மையை சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு அறிவிப்பது நம் கடமை. அந்தக் கட்டளையை நாம் முழுமனதாய், ஆசையாய் செய்யும் போது ஆவியானவரால் நமக்கு வரங்கள் கொடுக்கப்படுகின்றன. இதையே தான் பேதுரு செய்கிறார். தைரியமாய் எதிர்ப்பின் மத்தியிலும் எழும்பி நின்று இயேசுவை அறிவித்த போது வரங்கள் செயல்பட்டது. எனவே, அவர்கள் செல்லும் வழிகளிலும் ஆண்டவர் அவர்களைக் கொண்டு செயல்படத் துவங்கினார். 

 

பிரியமானவர்களே! இது போன்ற அற்புதங்கள் உங்கள் மூலம் நடைபெற வேண்டும் என்ற ஆவல் உண்டோ? நீங்கள் ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றும்போது கட்டாயம் உங்களைக் கொண்டு ஆவியானவர் பெரிதான காரியங்களை நடப்பிப்பார். எப்படி என்றால் அவரை விசுவாசித்து, அந்த விசுவாசத்தை மற்றவர்களுக்கும் கடத்தும் போது உங்கள் மூலம் வரங்கள் செயல்படும். அந்த விசுவாசத்தோடு என் கைகளை மற்றவர்கள் மீது வைக்கும் போது வியாதி மறைகிறது. பிசாசு ஓடுகிறது. நான் ஜெபிக்கின்ற ஜெபங்களை கேட்டு, மகத்தான காரியங்களை செய்து வருகிறார். உண்மையாய் அவரை விசுவாசிப்பீர்களானால் பிறருக்கு அவரை அறிவியுங்கள், வரங்கள் உங்களுக்குள்ளிருந்து செயல்படும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் கைகளாலும் இவைகள் நடக்கும், புறப்பட்டுப்போங்கள்.

- K. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு: 

இம்மாத ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş