By Village Missionary Movement
Saturday, 22-Jun-2024இன்றைய தியானம்(Tamil) 22.06.2024
ஆச்சரியமான அன்பு
"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்க பண்ணுகிறார்" - ரோமர் 5:8
ஒருமுறை சாதுசுந்தர்சிங் இமய மலை அடிவாரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பற்றியெரிந்த காட்டுத்தீயை அணைக்க முயற்சித்த ஒரு மக்கள் கூட்டத்தைக் கண்டார். அதில் பலர் எரிந்து கொண்டிருந்த ஒரு மரத்தைக் குறிப்பாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களை அணுகி விசாரித்த போது அந்த மரத்திலிருந்த ஒரு பறவைக் கூட்டை அவர்கள் காட்டினார்கள். அக்கூட்டுக்குள் சில குஞ்சுகள் கத்துகின்றன. தாய்பறவை சத்தமிட்டுக் கொண்டு அக்கூட்டைச் சுற்றிச் சுற்றி பறந்து கொண்டிருந்தது. தீயின் வேகம் அதிகரித்த போது தாய்ப்பறவை தன் செட்டைகளை விரித்து குஞ்சுகளை அணைத்துக் கொண்டது. அந்த மரம் சாய்ந்த போது எரிந்து கருகிப் போயிருந்த தாய்ப்பறவையை நீக்கிப் பார்த்தால் உள்ளே ஐந்து குஞ்சுகளும் பாதுகாப்பாயிருந்தன. ஐந்தறிவுப் பறவைக்குள் இத்தனை தியாக அன்பைக் கொடுத்த ஆண்டவரின் பரிபூரண அன்பை நாம் அடிக்கடி சந்தேகிப்பதேன்?
வேதத்திலே, சாலொமோன் நாட்களில் வந்த வழக்கில் ஒரு குழந்தைக்காக இரு பெண்கள் சண்டையிட்டனர். சாலொமோன் கூறிய தீர்ப்பு, குழந்தையை வெட்டி சரிபாதியாக கொடுங்கள் என்று. உயிரோடிருக்கும் பிள்ளையின் தாயின் குடல் துடித்ததினால் ஐயோ! ஆண்டவனே பிள்ளையை உயிரோடு அவளிடமே கொடுத்து விடுங்கள் என்று மன்றாடினாள். மற்றவள் வெட்டச் சொன்னாள். கதறி அழுத உண்மையான தாயிடமே குழந்தை கொடுக்கப்பட்டது. இதேப் போல் நரக ஆக்கினைக்கு நம்மைத் தப்புவித்து காப்பாற்றும்படியாய் இயேசு தன்னையே தந்தார்.
இயேசு சிலுவைப்பாடுகளுக்கு யூதர்களால் இழுத்துச் செல்லப்படுவதற்கு முன் காட்டிக் கொடுக்கப் போகும் யூதாஸ், மறுதலிக்கப் போகும் பேதுரு, தப்பி ஓடப்போகிற சீஷர்கள் என இவர்களுடைய கால்களைக் கழுவி, ஒரு முன் மாதிரியை வைத்தார். அவர்கள் தன்னை என்ன செய்வார்கள் என்று அறிந்திருந்தும் தன்னைத் தாழ்மைப்படுத்தி, தமது ஜீவனையே கொடுக்குமளவுக்கு அந்த அன்பு அவருக்குள் அனலாக எரிந்து கொண்டேயிருந்தது. அவர் நம்மிடம் காட்டிய அளவுகடந்த அன்பை நாமும் பிறரிடத்தில் காண்பிக்க முடியாதபடி நம்மில் இருக்கிற பிரச்சனைகளை எடுத்துப் போட ஆண்டவர் உதவி செய்வாராக! "ஆவியானவர் தாமே நம் ஒவ்வொருவரையும் அவருடைய அன்பினாலே நிறைக்கட்டும்."
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு
பிலிப் காஸ்பல் ஊழியங்கள் மூலம் சந்திக்கப்பட்ட கிராமங்களிலுள்ளவர்களின் பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864