By Village Missionary Movement
Wednesday, 19-Jun-2024இன்றைய தியானம்(Tamil) 19.06.2024
காண்கின்ற தேவன்
"கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது" - நீதிமொழிகள் 15:3
ஒருநாள் ஒரு மனிதன் ஒரு தோட்டத்தின் ஓரத்திலுள்ள புல்லை அறுத்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கண்கள் அந்த தோட்டத்திலுள்ள தக்காளிப் பழங்களைக் கண்டது. உடனே அவன் தன் மகனை அழைத்து நான் போய் இந்தப் பழங்கள் சிலவற்றை பறித்துக் கொண்டு வருகிறேன். நீ யாராவது வருகிறார்களா என்று பார் எனக் கூறினான். அப்போது அந்த சிறுவன் அப்பா, அப்பா ஒருவர் உங்களை பார்த்துக் கொண்டேயிருக்கிறார் என்றான். அப்போது அந்த மனிதன் யார் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். இல்லப்பா மேலேயிருந்து தேவன் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினான். அன்றிலிருந்து அந்த மனிதன் திருடுவதை விட்டுவிட்டார். ஆம், தேவன் எங்குமிருக்கிறார். காற்றை நம்மால் பார்க்க முடியவிட்டாலும் அதை உணருகிறோமல்லவா அதுபோல தேவனை நம்மால் பார்க்க முடியாது ஆனால், எப்போதும் அவரால் நம்மை பார்க்க முடியும்.
வேதத்திலும் ஆபிரகாம் மனைவியாகிய சாராளுக்கு குழந்தை இல்லை. சாராள் தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தாள் சாராள். சாராள், ஆபிரகாமிற்கு ஆகாரை மனைவியாக்கினாள். ஆகார் கர்ப்பவதியாகி ஒரு குழந்தையைப் பெற்றதினால் சாராளை மிகவும் அற்பமாக எண்ணினாள். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத சாராள் ஆபிரகாமிடம் அவளை அனுப்பிவிடும் படி கூறினாள். உடனே ஆபிரகாம் நீ உனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி அவளை நடத்து என்று சொல்லிவிட்டான். கடினமாக நடத்தப்பட்ட ஆகார் சாராளை விட்டு ஓடிப் போனாள். கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்திரத்திலே கண்டு ஆகாரே, எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய் என்று கேட்டார். அதற்கு அவள் நான் என் நாச்சியாராகிய சாராளை விட்டு ஓடிப்போகிறேன் என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் அவளை சாராளிடம் திரும்பிப் போய் அவள் கையின் கீழ் அடங்கியிருக்கச் சொன்னார். ஆகார், "நீர் என்னைக் காண்கிற தேவன்" என்று பெயரிட்டாள்.
ஆம், தேவன் நம்மைக் காண்கிறவர். அவர் உயர வானத்திலிருந்து நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். நாம் செய்கிற எந்தவொரு காரியமும் அவருக்கு மறைவாக இருக்க முடியாது. நமது வாழ்க்கையின் எல்லாக் காரியங்களையும் பார்த்துக் கொள்கிறவரும் செயல்படுத்தகிறவரும் அவரே! அவர் நாம் செய்யும் செயல்களை மட்டுமல்ல நம்முடைய நினைவுகளையும் காண்கிறார். நம் இருதயத்தில் மறைவானவைகள் கூட அவருடைய கண்களுக்கு மறைவானவைகள் அல்ல. நம்முடைய உட்காருதலையும் எழுந்திருக்குதலையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நாம் செய்யும் செயல்கள் அத்தனையும் ஆண்டவருக்கு பிரியமானதாக இருக்கட்டும். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
- Sis. ஹெப்சி
ஜெபக்குறிப்பு:
ஆகஸ்ட் 15ல் நடைபெறும் எழுப்புதல் வாலிபர் முகாமிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864