Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14.06.2024
Share:

By Village Missionary Movement

Friday, 14-Jun-2024

இன்றைய தியானம்(Tamil) 14.06.2024

 

என்னைப் பற்றி பேசாதீர்

 

"…கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்;…" - கலாத்தியர் 2:20

 

வில்லியம்கேரியை முதுமை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தது. பல்லாண்டுகள் கடினமாக உழைத்ததின் காரணமாக சரீரம் சற்று தள்ளாட ஆரம்பித்தது. இந்நிலையில் அலெக்சாண்டர் டஃப் என்ற இளம் மிஷனெரி இந்தியா வந்தார். அவர் அடிக்கடி வில்லியம் கேரியை சந்தித்து கேரியின் அளப்பரிய தியாகத்தை புகழ்ந்து கொண்டே இருந்தார். ஒருமுறை கேரி, டஃப் என்பவரைப் பார்த்து "எனது அன்புக்குரிய நண்பரே, நீர் அடிக்கடி என்னைப் பற்றியே புகழ் பாடிக் கொண்டிருக்கிறீர். நான் இறந்த பின் என்னைப் பற்றி ஒன்றும் பேச வேண்டாம். ஆனால் கேரியின் இரட்சகரைப் பற்றி மட்டுமே பேசும்" என்று மிகுந்த தன்னடக்கத்துடனும் தெளிவுடனும் கூறினார்.

 

வேதத்திலும் பரி.பவுல் மூலமாய் தேவன் அற்புதமான கிரியைகளை செய்தார் அவற்றில் சில:

 

1) லீஸ்திராவில் பவுல் ஒரு சப்பாணியைக குணமாக்கினார்.

 

2) பவுலின் உபதேசத்தினால் லீதியாளின் இருதயத்தைக் கர்த்தர் திறந்தார்.

 

3) குறி சொல்லும் அசுத்தாவியை உடைய பெண்ணிடமிருந்து அதைத் துரத்தி விட்டார்.

 

4) எபேசு பட்டணத்தில் சீஷர்கள் மேல் கைகளை வைத்த போது பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.

 

5) பவுலுடைய உறுமால்களையும், கச்சைகளையும் வியாதியஸ்தர்கள் மேல் போட்டவுடன் வியாதிகள் சுகமடைந்தன, பொல்லாத ஆவிகள் ஓடின.

 

6) பவுலின் உபதேசத்தைக் கேட்ட மாயவித்தைக்காரர்கள் தங்களிடத்தில் இருந்த ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு விலையுள்ள புத்தகங்களைச் சுட்டெரித்தனர்.

 

7) மரித்த ஐத்திருவை உயிரோடு எழுப்பினார்.

 

8) மெலித்தா தீவில் விரியன் பாம்பு பவுலைக் கடித்தும் ஒரு சேதமும் வரவில்லை.

 

9) பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் நடுராத்திரியில் ஜெபம் பண்ணி துதித்துப் பாடின போது சிறைச்சாலைக் கதவுகள் திறவுண்டது, எல்லோருடைய கட்டுக்களும் கழன்று போனது.

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, பவுல் மூலம் இவ்வளவு காரியங்கள் நடந்திருந்தாலும் நான் அல்ல கிறிஸ்துவே என்று தீர்க்கமாக இருந்தார். நான் பாவியிலும் பிரதான பாவி என்றும் கூறினார். நம்முடைய வாழ்வில் எப்படி நாம் இருக்கிறோம்? நம்மைப் பற்றி பெருமை பேசி கொண்டிருக்கிறோமா? அல்லது இயேசு இரட்சகரைப் பற்றி பேசி கொண்டிருக்கிறோமா? சற்றே சிந்திப்போம்.

- Sis. பாத்திமா

 

ஜெபக்குறிப்பு:

வட மாநிலங்களில் 500 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet güncel giriş holiganbet giriş sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş casibom casibom giriş casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş https://yourfilterconnection.com/ jojobet jojobet giriş Hiltonbet Hiltonbet giriş Hiltonbet güncel Hiltonbet jojobet alobet alobet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş jojobet jojobet giriş pashagaming tarafbet editörbet perabet perabet giriş grandbetting hitbet xslot sweet bonanza betkom giriş sweet bonanza betkanyon giriş perabet perabet giriş ultrabet giriş ultrabet ultrabet güncel giriş jojobet