Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12.06.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 12-Jun-2024

இன்றைய தியானம்(Tamil) 12.06.2024

 

பணத்தில் உண்மை

 

"…உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்" - நீதிமொழிகள் 12:22

 

ஆபிரகாம்லிங்கனும், அவருடைய நண்பர் பெர்ரி என்பவரும் சேர்ந்து கடை ஒன்றை நடத்தினார்கள். இந்நிலையில் ஆபிரகாம் லிங்கனே கடையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு நடத்தி வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரது நண்பர் கடைக்காக பல இடங்களில் கடனாக பணத்தைப் பெற்றுக் கொண்டு முழு குடிகாரனாக மாறி மரித்துப் போனார். ஆனால் லிங்கன் கடையை மூடிவிட்டு தன் நண்பர் வாங்கி இருந்த அவ்வளவு கடன் பணத்தையும் தானே வேலை செய்து கட்டி முடித்தார். ஒருவேளை லிங்கன் இது தான் நண்பர் வாங்கின கடன் என்று தப்பித்திருக்கலாம். ஆனால் லிங்கன் செய்தது முற்றிலும் அவரது உண்மை தன்மையை நிலை நாட்டுகிறது. இதனால் அவரை நாணயமுள்ள லிங்கன் என மக்கள் நம்பிக்கையோடு பார்க்கத் தொடங்கினர். பின்நாட்களில் அமெரிக்க அதிபராக உயர்த்தப்பட்டார்.

 

இஸ்ரவேல் ஜனங்களை நடத்திச் செல்வதற்கு தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் மோசே. மோசே வனாந்தரத்தில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான ஜனங்களை வழி நடத்தினார். அப்போது கர்த்தர் இவர்களுக்கு பலவிதமான ஆசீர்வாதங்களை கொடுத்தார். எல்லாவற்றிற்கும் மோசே உண்மையுள்ளவராக இருந்தார். அதனால்தான் வேதத்தில் மோசேயை பற்றி எழுதின சாட்சியை வாசிக்க முடிகிறது. மோசே பணிவிடைக்காரனாய் அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தார். இன்னும் வேதத்தில் அதிகமானோர் தங்களுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையாய் இருந்தனர்.

 

இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே, நாமும் நமக்கு கொடுக்கப்பட்ட வேலையில், பண விஷயத்தில், சின்ன சின்ன காரியத்தில் உண்மையாக இருக்கக் கற்றுக் கொள்வோம். அப்போது தான் எஜமானாகிய தேவன் வரும்போது அதற்கு ஏற்றபடி பதில் தருவார். எனவே நமக்கு கொடுக்கப்பட்ட வேலையில், நம்முடைய தாலந்துகளை வெளிப்படுத்துவதில், ஆண்டவருக்கு கொடுக்க வேண்டிய நேரங்களில், அவருக்காக செய்ய வேண்டிய ஊழியங்களில் உண்மையாயிருப்போம். மோசே தேவனால் சாட்சி பெற்றது போல நாமும் "உண்மையுள்ளவர்களாக" வாழ்ந்து தேவனிடமிருந்து பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுவோம்.

- Mrs. பேபி காமராஜ்

 

ஜெபக்குறிப்பு:

நம் மிஷனெரி பிள்ளைகளின் கல்வித் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet holiganbet güncel giriş matbet giriş holiganbet giriş sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş casibom casibom giriş casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş https://yourfilterconnection.com/ jojobet jojobet giriş Hiltonbet Hiltonbet giriş Hiltonbet güncel Hiltonbet jojobet alobet alobet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş jojobet jojobet giriş pashagaming tarafbet editörbet perabet perabet giriş grandbetting hitbet xslot sweet bonanza betkom giriş sweet bonanza betkanyon giriş perabet perabet giriş jojobet holiganbet