Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11.06.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 11-Jun-2024

இன்றைய தியானம்(Tamil) 11.06.2024

 

எழும்பி பிரகாசி

 

"எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது; கர்த்தருடைய மகிமை உன் மேல் உதித்தது" - ஏசாயா 60:1

 

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதிகளாக இருந்த ஆபிரகாம் லிங்கன், ஜார்ஜ்வாஷிங்டன், ஜான் கென்னடி போன்றவர்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் கடவுளோடு கூட இருந்த ஐக்கியத்தினால் உயர்த்தப்பட்டு, எழும்பிப் பிரகாசித்து இன்றும் மங்காத புகழுடன் அவர்களின் சரித்திரம் இருக்கிறது.

 

மிஷனெரிமார்களாக பல ஆயிரம் பேர் உலகெங்கிலும் எழும்பி பிரகாசித்தவர்கள் ஏராளம்! பலர் மறைந்து போனாலும் மங்காத புகழுடன் அவர்கள் நற்செயல்கள் பிரகாசமாக உள்ளது. 

 

வேதத்திலே பழைய ஏற்பாட்டில் தேவனுக்காய் எழும்பிப் பிரகாசித்தவர்களை எபிரெயர் 11 ஆம் அதிகாரத்தில் விசுவாசிகளின் பட்டியலில் ஆவியானவர் எழுதிவைத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இன்று வரை உள்ள விசுவாசிகளும் இயேசு கிறிஸ்துவை தங்கள் உள்ளத்தில் ஒளியாகக் கொண்டு பிரகாசிக்கிறார்கள். எழும்பி பிரகாசித்தவர்கள், தங்கள் ஆத்துமாவையும் காத்தவர்கள் பிறருடைய ஆத்மாவையும் காத்தவர்கள்.

 

"கெவின் கார்ட்டர்" என்ற உலகப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் சிறந்த புகைப்படம் ஒன்றிற்காக, நோபல் பரிசுக்கு இணையான பரிசை பெற்றார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவர்கள் அதற்கு பின்னால் என்ன நடந்தது என்ற கேள்வியை உலகமெங்கிலுமிருந்து கேட்கத் தொடங்கினர், கேள்விக்கு பதில் சொல்ல இயலாத கெவின் கார்ட்டர் பரிசைப் பெற்ற இரண்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் பதிலாக எழுதி வைத்தது, "என்னை அதிகமதிகமாய் மன்னியுங்கள்; காரணம் நான் எடுத்த புகைப்படம், சூடான் நாட்டில் ஒரு சிறுமி எலும்புக்கூடு போல் இருந்தாள், அந்த சிறுமிக்கு சற்று தொலைவில், பிணம் தின்னி கழுகு ஒன்று உட்கார்ந்து இருந்தது. பசி தாகத்தால் உணவின்றி சாகும் ஜனக்கூட்டத்தில் இந்த சிறுமியும் ஒருவள். அவளை காப்பாற்ற நான் எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், புகைப்படம் எடுப்பதையே முக்கியப்படுத்தினேன்" என்று எழுதி வைத்து விட்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டார். ஆம், நம் சிந்தை தேவனுக்கேற்றவைகளை சிந்தியாமல் மனுஷீகமாக காணப்படும் போது நம் விளக்கை பிசாசானவன் அணைத்துவிடுகிறான். ஆனால் தேவனோ நாம் எழும்பி பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புகிறார்.

 

இன்று நாமும் யாரை விழுங்கலாமோ என்று காத்திருக்கும் சாத்தானை குறித்து அழகாக பிரசங்கம் செய்கிறோம். அவனிடத்திலிருந்து மக்களை காப்பாற்ற பிரயாசப்படுவதில்லை. "உன் விசுவாசம் ஒளிந்து போகாதபடி உனக்காக வேண்டிக் கொண்டேன்" என்று பேதுருவுக்காக ஜெபித்த இயேசுவைப் போல் வாழ்வோம். உலகிற்கு ஒளி வீசுவோம்.

- S. சாமுவேல் மோரீஸ்

 

ஜெபக்குறிப்பு:  

கண்மணிபிள்ளை இயேசுவுக்காக திட்டத்தில் இணைந்துள்ள வாலிபர்கள் பரிசுத்தமாய் வாழ ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet güncel giriş holiganbet giriş sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş casibom casibom giriş amgbahis amgbahis giriş casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş https://yourfilterconnection.com/ grandpashabet jojobet jojobet giriş Hiltonbet Hiltonbet giriş Hiltonbet güncel Hiltonbet jojobet alobet alobet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş jojobet jojobet giriş