Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.06.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 04-Jun-2024

இன்றைய தியானம்(Tamil) 04.06.2024

 

அவிசுவாசத்தை அகற்றுவோம்

 

"…அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக் கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்" - எபிரேயர் 3:19 

 

உலக சரித்திரத்திலும், வேதத்திலும் அநேகர் விசுவாசம், நம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கையைத் துவக்கி வெற்றி கண்டவர்கள், காலப்போக்கில் அவிசுவாசம், அவ நம்பிக்கை என்ற சேற்றில் விழுந்து, தோல்வி அடைந்துள்ளார்கள்.

 

நீச்சல் வீராங்கனையாக திகழ்ந்த பிளாரன்ஸ் கேட்விக் பல உலக சாதனைகளைப் படைத்தவர். இவர் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனையை படைக்க மிகுந்த பயிற்சி எடுத்துக்கொண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியது, "பசிபிக் மகாசமுத்திரத்தில் உள்ள காட்டனினா தீவில் இருந்து தெற்கு கலிபோர்னியா வரை 34 கிலோ மீட்டர் நீந்தி கடக்கப் போகிறேன்" என்று! இப்பகுதி மிகவும் ஆபத்தானது, கடல் அலை, மற்றும் மீன் தாக்குதல் மூலம் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தனர். இதை எதிர்கொள்ள தயாரான வீராங்கனை ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தாண்டியபின் கரை சேர இன்னும் நீண்ட நேரம் ஆகுமோ என்ற பயமும், அவநம்பிக்கையும் ஏற்பட்டு, தன்னால் முடியாது என்று சைகை காட்டினார். அவரை ஹெலிகாப்டர் உதவியினால் மேலே தூக்கிக் கொண்டனர். உயர சென்றதும் கரையைப் பார்த்தார், அதிர்ந்து போனார். இன்னும் சிறிது முயற்சி எடுத்தால் வெற்றி என தெரிந்தது, உடனே ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தார். இன்று அநேகர் விசுவாச ஓட்டத்தை கடைசி வரை ஓட முடியாமல் பாதியில் சோர்ந்து போய்விடுகிறார்கள். இதற்கு பல காரணங்களை கூறுகின்றார்கள்.

 

எலியா போன்ற விசுவாச வீரர்களும் வெளியிலிருந்து வந்த பயமுறுத்துதல்களை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் ஓட்டத்தை முடித்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள். யோனா போன்ற தேவ சமூகப் பழக்கம் உள்ளவர்களும், பாதை மாறி போய், உலக வாழ்க்கையை முடித்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். ஆனால் பவுல் போன்றவர்கள் பல பாடுகளை இன் முகத்தோடு ஏற்றுக்கொண்டு, தங்கள் ஓட்டத்தை ஜெயமாக ஓடி முடித்தார்கள். 

 

நம் காலத்தில் வாழ்ந்த மிஷனெரிகளும் பாடுகளை பஞ்சு மெத்தையாக கருதி பலரை சீஷர்களாக, மிஷனெரிகளாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கை சரித்திரத்தின் மூலமாக நாமும் அவிசுவாசத்தினால் வெற்றியை இழந்து விடாதபடி சரித்திரம் படைக்க, பாடுகளை சகித்து சாட்சியாய் வாழ்வோம்.  

- T. செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

இன்று நமது வளாகத்தில் நடைபெறும் இரவு ஜெபத்தில் ஆண்டவர் பலத்த கிரியைகளை செய்ய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al