Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02.06.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 02-Jun-2024

இன்றைய தியானம்(Tamil) 02.06.2024 (Kids Special)

 

புது தீர்மானம்

 

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" - சங்கீதம் 32 :8

 

ஹலோ குட்டீஸ்! Leave எல்லாம் முடிந்து School தொடங்கியாச்சா? ரொம்ப கஷ்டமா இருக்குதா? இல்ல ஜாலியா இருக்குதா? ஓ.. ரொம்ப ஜாலியா? Friends கூட சேர்ந்து ஜாலியா விளையாடலாம், சிரிக்கலாம் ஆனால் படிப்பில் கவனமாக இருக்கணும். Ok குட்டீஸ் கதை கேட்கலாமா?  

 

ஜிம் என்ற குட்டி தம்பி இருந்தான். Sunday School தவறாமல் கலந்து கொள்வது, வேதம் வாசிப்பதிலெல்லாம் ரொம்ப சரியா இருப்பான். ஆனால் அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. இவ்வளவு நல்ல பையன் கிட்டயா? என்றுதானே யோசிக்கிறீங்க ஆமா! எப்ப பார்த்தாலும் Cell phone -ல் Free Fire game விளையாடிக் கொண்டேயிருப்பான். இது அம்மாவுக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. Cell phone -ல மட்டும் கீழ்ப்படியமாட்டாயா? அம்மா போதும் என்று சொல்லும் போதெல்லாம் அம்மா கொஞ்ச நேரம் தான்ம்மா, என்று சொல்லுவான் நேரம் போவதே தெரியாமல் விளையாடுவான். 

 

என்ன குட்டீஸ், ஜிம் பண்றது தப்பு தானே! நீங்களும் இதே தவறை செய்து கொண்டிருக்கிறீர்களா? No.. No.. சரி வாங்க ஜிம்முக்கு என்ன ஆச்சுன்னு கதை கேட்கலாம். ஜிம் தங்கச்சி ஜூடி, "அம்மா, அண்ணன் பைபிளை தப்பு தப்பா வாசிக்கிறான்மா" என்று சொன்னதும் என்ன ஆச்சு ஜிம் குட்டிக்குன்னு அம்மா கேட்டதும் ஜிம் சொன்னான், "ஆமாம்மா எனக்கு சரியா எழுத்துத் தெரியலன்னு" சொன்னதும் அம்மா ரொம்ப கவலைப்பட்டாங்க. அடுத்த நாள் Eye Doctor-ரை போய் பார்த்தா, கண்ணில் சின்னதா கட்டி இருக்குது. சரியா கவனிக்கலான கேன்சராக மாறிடும் என்று டாக்டர் சொன்னார். ரொம்ப Cell phoneபார்க்க கூடாது. கண் பார்வை உங்களுக்கு வேண்டும் என்றால், கண்டிப்பா TV, Cell phone -ஐ Avoid பண்ணனும் என்று டாக்டர் சொன்னதும், அம்மா சோக முகத்தோடு கலங்கிய கண்களோடு ஜிம்மின் முகத்தை பார்த்தாங்க. ஜிம் மனதுக்குள் உறுதியான தீர்மானம் ஒன்றை எடுத்தான். இனிமேல் Cell phone பார்க்க மாட்டேன். Jesus நீங்க எனக்கு உதவி செய்யுங்க, Please என்ற ஜெபத்தோடு தன்னை ஒப்புக்கொடுத்தான். 

 

தம்பி, தங்கச்சி இந்த புதிய கல்வியாண்டில் நீயும் சில தீர்மானங்கள் எடுத்திருக்கலாம். அதில் நிலைத்திரு. Jesus உனக்கு உதவி செய்வார். மனதை கெடுக்கிற TV, Cell phone, கெட்ட நண்பர்களுக்கு உன் நேரத்தை கொடுக்காமல், படிப்பில் கவனம் செலுத்து. புதிய கல்வி ஆண்டு உனக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

- Sis. ஜெயசீலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al