By Village Missionary Movement
Monday, 27-May-2024இன்றைய தியானம்(Tamil) 27.05.2024
பதில் சொல்வதில் கவனமாயிரு
"கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும், அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி" - நீதிமொழிகள் 25:12
ஒரு அலுவலகத்தில் ராமு 25 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். அதனால் அவரும் அவரது மேலதிகாரியும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். மேலதிகாரிக்கு ராமுவை எப்படியாவது உயர் பதவியில் அமர்த்த வேண்டும என்ற ஆசை இருந்தது. ஒரு நாள் மேலதிகாரி ராமுவிடம் நாளைக்கு காலை நான்கு மணிக்கு அலுவலகத்திற்கு வரும்படி கூறினார். சரி என்று கூறிவிட்டு ராமு வீட்டிற்கு சென்று தூங்கி விட்டான். அடுத்தநாள் காலையில் நான்கு மணிக்கு ராமு எழுந்திருக்கவில்லை. எபபோதும் போல அலுவலகத்திற்கு சென்றான். அவனுடைய மேலதிகாரி ஏன் வரவில்லை என்று கேட்டார். அதற்சு ராமு சற்றும் யோசிக்காமல், "மறந்து போய் தூங்கி விட்டேன்" என்றார். இந்த பதில் மேலதிகாரிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதினிமித்தம் அவனுக்கு கொடுக்கப்பட வேண்டிய உயர்பதவி அவனுக்கு கொடுக்கப்படவில்லை.
எனக்கன்பானவர்களே, ஒரு பதில் ஒருவரது வாழ்க்கையையே மாற்றிப் போட்டது. நாமும் நமது வாழ்க்கையில் கூறும் ஒவ்வொரு பதிலும் சிந்தித்து சமயத்திற்கு ஏற்றதாக, ஞானமானதாக பேச வேண்டும். வேதத்தில் கூட, நெகேமியா 2:4,5 வசனங்களில் நெகேமியா, ராஜா கேட்ட கேள்விக்கு ஜெபம் பண்ணி பதில் கூறுவதைப் பார்க்கிறோம். இதினிமித்தம் ராஜாவின் கண்களில் நெகேமியாவுக்கு தயவு கிடைத்ததைப் பார்க்கிறோம். நாபால் தன்னுடைய அவசர பதிலால் தன்னுடைய வாழ்க்கையையே இழந்து போனான். யோசேப்பு கூட நான் அல்ல தேவனே மங்களகரமான பதில் தருவார் என்று ஞானமாய் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவிடம் குற்றம் கண்டுபிடிக்கும்படி இரு கூட்டத்தினர் எப்போதும் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய குதர்க்கமான கேள்விகளுக்கெல்லாம் அவர் மிக ஞானமாய் அதே வேளையில் நிதானமாய் பதிலளித்தார்.
அதுபோல நம்முடைய பதிலும் ஞானத்தோடும், தாழ்மையோடும் இருக்க வேண்டும். நம்முடைய பதிலில் கர்த்தர் கொடுக்கும் வார்த்தை இருக்க வேண்டும். நீதிமொழிகள் 15:1ல் "மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்" என்று கூறப்பட்டுள்ளது. நம்முடைய பதில் பிறரை காயப்படுத்துவதாகவும் மதிக்காததாகவும் இருக்கக்கூடாது. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது. இதன் அர்த்தம் என்ன? ஒரு பிரச்சனையில் நான் ஞானமாய் பேசினால் என் ஜீவன் தப்பும் எனக்கு ஆசீர்வாதம், இல்லாவிட்டால் தர்ம அடி வாங்க வேண்டியதுதான். கிடைக்க வேண்டிய நன்மையும் கைவிட்டுப் போய்விடும். ஆகவே எப்போதும் தேவனைச் சார்ந்து யோசித்து பதிலளிப்போம். ஆமென்.
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் மருத்துவமனை ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும் நபர்கள் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864