Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  17-04-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 17-Apr-2021

இன்றைய தியானம்(Tamil)  17-04-2021

JUNIOR JESUS 

“...என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.” – யோவான் 14:12

உத்திரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர் O.P. சர்மா. மிகவும் கடினப்பட்டு, தனது 7வது வயதிலிருந்தே Magic Show செய்வதில் கவனம் செலுத்தினார்.  பல பாடுகள்பட்டு Magic Show நடத்துவதில் வல்லவரானார். இவரது மாய வித்தைகள் வட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றது. இவருடைய மகன் சத்யபிரகாஷ் சர்மா  Mechanical Engineer படித்து முடித்திருந்தாலும் தனது அப்பாவின் Magic Show வை தொடர்ந்து நடத்தி வருகிறார். அப்பாவின் முகபாவனை, அவரைப்போன்ற சிரிப்பு, கலகல பேச்சு மற்றும் நவீன தொழில் நுட்பத்தோடு எல்லாவற்றையும் செய்து வருகிறார். அநேகர் அவரை ஜீனியர் O.P. சர்மா என்றே அழைக்கிறார்கள். அச்சு அசல் O.P. சர்மா போன்றே இருப்பார். 

பிதாவானவர் இயேசு கிறிஸ்து மூலமாய் நம்மை அவருக்கு சொந்தமாக்கியுள்ளார். நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறது மட்டுமல்ல, அவரைப் போலவே மாற வேண்டிய காலம் இது. இயேசு கிறிஸ்து மனு உருகொண்டு இரட்சிப்பை நமக்குக் கொடுத்தார். நாம் அவரை விசுவாசிக்கும் போது அவர் செய்த கிரியைகளை நாமும் செய்ய முடியும் என்பதுதான் வேதத்தின் போதனை. நாம் அநேகம் ஆசைகளை மனதில் வைத்திருக்கலாம். ஆனால் நம்முடைய தகப்பனின் ஆசை அதைவிட முக்கியம், நம்முடைய விருப்பத்தை தகப்பனுக்காக விட்டுக் கொடுப்போம். அப்போது இயேசுவைப் போலவே நாமும் கிரியை செய்ய முடியும். நம் மூலமாக அநேகர் இயேசுவை அறிந்து கொள்வார்கள். 

இதை வாசிக்கின்ற நண்பர்களே! இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் ஜீனியர் இயேசுவாக வாழ வேண்டும். இந்த உலகம் முதலாவது நம்மைத்தான் பார்க்கிறது. நாம் இயேசுவின் பிள்ளையாக வாழ்ந்தால் உலகம் இயேசுவை அறியும். நாம் சுவிசேஷம் அறிவிப்பதற்கு முன்பு நம் வாழ்வே சுவிசேஷமாய் மாற வேண்டும். இதுதான் இந்த உலகத்தை தேவன் பக்கம் திருப்ப சரியான வழி ஆகும். இயேசுவைப் போன்று எல்லாரையும் ஏற்று, அவர்களுடைய மன, சரீரத் தேவைகளை சந்திக்கிறவர்களாயிருப்போமென்றால் நாமும் இயேசுவின் “ஜீனியர் ஜீசஸ்” ஆக வாழ முடியும். இதுதான் நாம் சுவிசேஷம் அறிவிக்கும் முறையாகும். இயேசுவைப் பின்பற்றுவோம்! ஜீனியர் இயேசுவாய் வாழ்வோம்!
-    T. சங்கர்ராஜ் 

ஜெபக்குறிப்பு:
மோட்சப்பயணம் மாத இதழ் அநேகருக்கு பிரயோஜனமாய் காணப்பட; இதன் மூலம் பக்தி விருத்தியடைய ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş