Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.05.2024
Share:

By Village Missionary Movement

Saturday, 25-May-2024

இன்றைய தியானம்(Tamil) 25.05.2024

 

ஒரு தெய்வீக ஆணை

 

"நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர்…" - சங்கீதம் 110:4

 

அமெரிக்காவின் 36 - வது ஜனாதிபதியாக லிண்டன் பி.ஜான்சன் பதவியேற்ற புகைப்படம் மிகவும் பிரபலமானது. ஜான் எஃப் கென்னடி அன்று ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பின்னர் அன்றைய தினம் நடந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஏர்போர்ஸ் விமானத்தின் ஒரு சிறிய அறையில் லிண்டன் ஜான்சன் நின்று கொண்டிருந்தார். அவருடன் அவர் மனைவி லேடிபேர்டும், ஜாக்குலின் கென்னடியும் நின்றிருந்தார்கள். விமானத்தில் வைத்து ஒரு அமெரிக்க ஜனாதிபதி பதியேற்றதும், ஒரு பெண் மாவட்ட நீதிபதி அந்த நிகழ்ச்சியை நடத்தியதும், ஒரு கத்தோலிக்க ஜெப புத்தகத்தை உறுதிமொழி எடுக்க பயன்படுத்தியதும் அதுதான் முதல்முறை!

 

இன்றைய வேதபகுதியில் குறிப்பிடுவது போல, வரலாற்றில் இதுவரை எடுக்கப்பட்ட உறுதிமொழியிலேயே மிகவும் பக்திவிருத்தியானதும் உடன்படிக்கையில் உன்னதமானதும் இதுதான். கிறிஸ்துவின் ஆசாரியத்துவம் நிறுவப்பட்ட போது அந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழி எடுத்தல் என்பது பக்தியோடு பொருத்தனை செய்வதாகும். கிறிஸ்துவின் ஆசாரியத்துவம் ஆரோனுடைய சந்ததியின் அடிப்படையில் இருக்கவில்லை. தேவன் நியமித்த மெல்கிசேதேக் ஆசாரியனாகவும், இராஜாவாகவும் இருந்தது போல, இயேசுகிறிஸ்து நம்முடைய நித்திய இராஜாவாகவும், ஆசாரியனாகவும் இருக்கிறார்.

 

பிரியமானவர்களே, பூமிக்குரிய ஆசாரியத்துவத்தில் மிருகங்களின் இரத்தம் செலுத்தப்பட்டது. ஆனால் கிறிஸ்து தம்மையே நம் பாவங்களுக்காக ஒப்புக் கொடுத்தார். இயேசுவின் பூமிக்குரிய ஆசாரியத்துவத்தை ஆட்டுக்குட்டியானவர் நிறைவேற்றினார். அதே போல இந்த உலகில் எத்தனையோ பேர் பலவிதமான உறுதிமொழிகளை கொடுக்கிறார்கள். ஆனால் எல்லாவிதமான வாக்குறுதிகளும், உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படுவதில்லை. ஆனால் நம்முடைய பிதாவாகிய தேவன் தாம் சொன்னதை நம் எல்லோருக்காகவும் நிறைவேற்றினார். எனவே அவரே நம்முடைய நித்திய ராஜாவாகவும் இருக்கிறார். திரும்ப வருவேன் என்று சொல்லி போய்விட்ட அவரின் உறுதிமொழி மேல் நம்பிக்கையாயிருப்போம். வருவேன் என்று சொன்னவர் நிச்சயம் நம்மை அழைத்துச் செல்ல வருவார். இதுவரை அவர் சொன்ன அனைத்துக் காரியமும் நிறைவேறிக் கொண்டே வருகிறது. அவர் வருவார் பூமியை நியாயந்தீர்க்க நியாயாதிபதியாக வருவார் என்பதும் நிச்சயம் நடக்கும். அவரை சந்திக்க நாம் ஆயத்தமாவோம்.

- Mrs. குமாரி சுமா

 

ஜெபக்குறிப்பு: 

நம்முடைய ஊழியர்கள் மூலம் பணித்தளங்களில் நடைபெறும் சுவிசேஷ ஊழியங்களில் தேவன் நல்ல அறுவடையைக் கட்டளையிட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al