Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.05.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 21-May-2024

இன்றைய தியானம்(Tamil) 21.05.2024

 

குறைவுகளை நிறைவாக்குவார்

 

"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" - பிலிப்பியர் 4:19

   

இங்கிலாந்து தேசத்திலே இருந்த ஜார்ஜ் முல்லர் ஒரு விசுவாச வீரர். ஆயிரக்கணக்கான பிள்ளைகளை தன்னுடைய விடுதியில் வைத்து பராமரித்து வந்தார். ஒரு நாள் காலை உணவிற்கான நேரம் வந்த போது உணவு ஏதும் இல்லை. ஏதாவது வாங்க வேண்டுமானால் கையில் பணமும் இல்லை. எல்லா தட்டுகளும் எல்லா டம்ளர்களும் காலியாக இருந்தன. எல்லாரையும் அமரச் செய்து தங்கள் தலைகளைத் தாழ்த்தி, எங்கள் தகப்பனே நீர் எங்களுக்கு கொடுக்க இருக்கும் உணவிற்காக நன்றி என்று சொல்லி ஜெபித்தார். ஆமென் என்று சொல்லி முடிப்பதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அங்கு ரொட்டிகளை செய்பவர் நின்றிருந்தார். அவர் எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. உங்களுக்கு சாப்பிட காலையில் ஒன்றுமில்லை என்று எனக்கு தோன்றியது. ஆகவே காலை இரண்டு மணிக்கு எழுந்து உங்களுக்கென்று புதிதாக இந்த ரொட்டிகளை செய்தேன் என்று தேவையான ரொட்டிகளை அவரிடம் கொடுத்தார். அது முடிந்த உடனே மற்றொரு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தால் பால் கொடுப்பவர் அவருடைய வண்டி இந்த விடுதியின் முன்பாக பழுதடைந்து விட்டது. அதை சரிசெய்ய வேண்டுமானால் அதிலிருந்த எல்லா பாலையும் வெளியேற்ற வேண்டும். ஆகவே இந்தப் பாலை வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கேட்டார். இப்படியாக ஜார்ஜ் முல்லரின் அன்றைய தேவைகள் சந்திக்கப்பட்டு குறைவுகள் மாறியது.  

 

யோவான் நற்செய்தி நூலில் கானா ஊரிலே ஒரு கல்யாணம் நடந்தது. இயேசுவும் அவருடைய சீஷர்களும் அந்த கல்யாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த கல்யாண வீட்டில் திராட்ச ரசம் குறைவுபட்டது. இயேசுவானவர் கற்சாடிகளில் தண்ணீரை நிரப்பி அதை திராட்சை ரசமாய் மாற்றினார். உடனே அங்கேயிருந்தவர்கள் எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தை கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்த பின்பு ருசி குறைந்ததைக் கொடுப்பான். நீரோ நல்ல ரசத்தை தந்தீரே என்று விமர்சனமாக பேசினார்கள்.

 

எனக்கு அன்பானவர்களே! இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கையில் பணக்குறைவா? பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த குறைவா? திருமணத்தை நடத்த முடியாமல் பணக்குறைவா? இவைகள் எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு இயேசுவின் பாதம். இயேசுவின் பாதத்தில் அமர்ந்து உங்கள் குறைவையெல்லாம் அவரிடம் சொல்லும் போது குறைவுகள் நிறைவாகும். உங்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். எனவே குறைவுகளை நிறைவாக்குகிற தேவன் உங்களோடு இருக்கும் போது குறைவுகளை எண்ணி வீணாக ஏன் புலம்பி தவிக்க வேண்டும்.

- Mrs. கிளாடிஸ் முரளி

 

ஜெபக்குறிப்பு:

சிறுவர் முகாம்களில் சந்திக்கப்படும் சிறுவர்களுக்கு இயேசுவின்பரிசு என்னும் பரிசு கொடுக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al