Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19.05.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 19-May-2024

இன்றைய தியானம்(Tamil) 19.05.2024 (Kids Special)

 

பினு குருவியும்-நண்பர்களும்

 

"கர்த்தரைப் பாடி, அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்." -சங்கீதம் 96:2

 

ஹாய் குட்டீஸ் உங்களுக்கு birds என்றால் ரொம்ப பிடிக்குமா? உங்க வீட்டிலேயும் love birds எல்லாம் வளர்க்கிறீங்களா? ஆமா, நீங்கள் பறவைகள் சரணாலயம் போயிருக்கீங்களா? அங்க கலர்கலரான அழகான பறவைகள் எல்லாம் இருக்கும் தெரியுமா? இந்த summer leave க்கு உங்க அப்பா அம்மாவோட பறவைகள் சரணாலயம் போய் நிறைய பறவைகளைப் பார்த்துவிட்டு வாங்க குட்டிச் செல்லங்களா.

 

இப்படித்தான் ஒரு அடர்ந்த காட்டிலே ஒரு அழகான பெரிய மரத்திலே பினு குருவியும் அதன் நண்பர்களும் கூடுகட்டி வாழ்ந்து வந்தாங்க. தினமும் காலையிலே எழுந்திருச்சி தனித்தனியே இரை தேடப் போயிட்டு சாயங்காலம் வந்து, தான் கொண்டு வந்த இரையை தன் குஞ்சுகளுக்கும் கொடுத்து சந்தோஷமாய் வாழ்ந்து வந்தாங்க. இப்படி இரை தேடப் போன போது பினு போன இடத்தில் மட்டும் அதிக இரை கிடைத்தது. தினமும் அந்த இடத்திற்குப் போய் இரையைக் கொண்டு வந்து தன் கூட்டில் சேர்த்து வைத்தது. மற்ற குருவிகளுக்கோ சேர்த்து வைக்கிற அளவுக்கு தானியம் கிடைக்கவில்லை. 

சில நாட்கள் ஆனது. மழையும் வந்தது. இந்த பினு மட்டும் தான் சேர்த்து வைத்திருந்த தானியங்களை சாப்பிட்டு சுகமாய் இருந்தது. மற்ற பறவைகளோ கடுமையான மழையினால் இரை தேடச் செல்ல முடியாமல் பசியினால் வாடின. நாட்கள் சென்றன. மழையும் நின்ற பாடில்லை. அதனால் பறவைகள் இன்னும் பசியினால் சோர்ந்து போய்க் கொண்டிருந்தன. குஞ்சுகள் பசியினால் இறந்தும் விட்டன. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பினு குருவி தன் மனதிற்குள் ஐயோ நான் தவறு செய்து விட்டேனே நான் இரைதேடச் சென்ற இடத்தில் நிறைய தானியங்கள் இருந்ததே, அப்போதே சொல்லியிருந்தால் என் நண்பர்களும் போய் சேகரித்து வைத்திருந்திருப்பார்களே. இப்படி அநியாயமாய் இவ்வளவு குஞ்சுகளும் செத்துவிட்டதே. இதற்கு நான் காரணமாகி விட்டேனே என்ற குற்ற உணர்வோடு அழுது கொண்டே, பசியால் துடித்துக் கொண்டிருந்த மற்ற பறவைகளுக்கு தான் வைத்திருந்த உணவை பகிர்ந்து கொடுத்தது. இறுதியில் தன்னிடம் இருந்த தானியமும் முடிந்தது. மழையும் நிற்பதாக இல்லை. இப்பொழுது பினுவும் பசியால் வாடியது. நான் அன்றே என் நண்பர்களுக்கு சொல்லியிருந்தால் இன்று எல்லோரும் சந்தோஷமாய் இருந்திருக்கலாமே என்று எண்ணி மிகவும் வருந்தியது.

 

குட்டி தம்பி, தங்கச்சி நீங்களும் இப்பத்தான் இயேசப்பாகிட்ட இருந்து பெற்ற நன்மைகளை, இரட்சிப்பை மற்றவர்களுக்கு சொல்லாமல் இருக்கக் கூடாது. உன் கூட படிக்கிற, உங்க தெருவுல இருக்கிற எத்தனைபேர் எனக்கு யார் நன்மை செய்வார் என்று கலங்கி கொண்டிருப்பாங்க. அவங்ககிட்ட இயேசப்பா உங்களுக்கு உதவுவார் அப்படினு சொல்லணும். ஒரு வேளை அவங்க இரட்சிக்கபடாமல் நரகத்திற்கு போயிட்டாங்கண்ணா அந்த பழி உன்மேல்தான் வரும். நீ அனுபவித்த இயேசப்பாவை மற்றவர்களுக்கும் அறிவி.

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet