By Village Missionary Movement
Saturday, 18-May-2024இன்றைய தியானம்(Tamil) 18.05.2024
குறைவை நிறைவாக்குவார்
"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" - பிலிப்பியர் 4:10
மாபெரும் பிரசங்கியார் சார்லஸ் ஸ்பர்ஜன், இவர் தன் தாத்தாவின் வாழ்வில் நடந்த அநேக அற்புதங்களை தன் பிரசங்கங்களில் குறிப்பிடுவதுண்டு. இவர் தாத்தாவின் பெயரும் ஸ்பர்ஜன். ஊழியக்காரரான அவருக்கு பத்து பிள்ளைகள். ஊழியத்தில் வரும் ஊக்கத்தொகை குறைவானது. எனவே ஏழ்மையான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வந்தனர். குழந்தைகளின் பசியாற்ற ஒரு பசு மாடு மட்டுமே அவர்களிடம் இருந்தது. திடீரென்று ஒரு நான் அந்த பசுமாடு மரித்துப் போனது. பிள்ளைகளுக்கு பால் கொடுக்க முடியாதே என்ற கவலையில் ஸ்பர்ஜனின் மனைவி என்ன செய்யப் போகிறோம் என அங்கலாய்த்தாள்.
பெரியவர் ஸ்பர்ஜன், சற்றும் தயங்காமல் என்ன செய்வதென்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் என் தேவன், நம் பிள்ளைகளுக்கு பால் வேண்டும் என்பதை அறிவார். ஆகவே அதை தேவன் தருவார் என்றார். மறுநாள் காலை ஒரு மனிதர் அவர் வீட்டிற்கு வந்து இருபது பவுண்ட் பணம் கொடுத்து விட்டுச் சென்றார். உடனே ஸ்பர்ஜன் பால் கொடுக்கும் பசு ஒன்றை வாங்கி வந்தார். பின்புதான் இந்தப் பணம் எப்படி வந்தது என்பதை அறிந்தார்.
இங்கிலாந்திலுள்ள செல்வந்தர்கள் தங்கள் காணிக்கை பணத்தை பல ஊழியர்களுக்குப் பிரித்துக் கொடுக்கக் கூடினர். பெரியவர் ஸ்பர்ஜனும் அவர்கள் ஞாபகத்திற்கு வரவே அவருக்கும் இருபது பவுண்ட் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. பணம் குறிப்பிட்ட நேரத்தில் வந்து ஊழியக் குடும்பத்தின் குறைகள் தீர்க்கப்பட்டது.
பிலிப்பியர் பவுலின் ஊழியத்தின் தேவைகளை சந்திப்பதற்காக மனப்பூர்வமாக பொருளுதவி அனுப்பினர்கள். இப்படி அநேகர் மனப்பூர்வமாய் கொடுத்து உபத்திரவத்திலுள்ளவர்களின் சபையையும், ஊழியங்களையும் தாங்கினர். உண்மை ஊழியருக்கு பொருளுதவி செய்யும் பொழுது நமது கணக்குக்குப் பலன் பெருகும்.
எனக்கன்பானவர்களே, நம் வாழ்வில் ஏற்படும் குறைகளைக் கண்டு பயம், பதட்டமில்லாமல் விசுவாசத்துடன் ஆண்டவரோடு நாம் கொண்டுள்ள ஆழமான உறவில், அன்பில் நம்மையும் நம் குடும்பத்தையும் அர்ப்பணிப்போம்! அன்பு நிறைந்த தேவன் நம் தேவைக்கேற்ற விதத்தில் நம் குறைவுகளை நிறைவாக்கி ஆசீர்வதிப்பார். சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருந்தாலும், கர்த்தரைத் தேடுவோருக்கு ஒரு குறைவும் வராது. ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
தெபொராள் ஊழியர்களை மாதம்தோறும் காணிக்கையினால் தாங்கும் நபர்களை ஆண்டவர் எழுப்பித்தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864