Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  16-04-2021
Share:

By Village Missionary Movement

Friday, 16-Apr-2021

இன்றைய தியானம்(Tamil)  16-04-2021

ஜெபத்தின் மேன்மை 

“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.” – 1தெச. 5:17

ஜார்ஜ் வில்லியம்ஸ் வேலை நிமித்தமாக லண்டன் மாநகருக்கு வந்தார். அங்கு லட்கேட்ஹில் என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய ஜவுளிக் கடையில் பணிசெய்து வந்த 140 பணியாட்களில் ஒருவனாக இருந்தார். 

ஜார்ஜ் வில்லியம்ஸ் மற்றவர்களில் இருந்து சற்று மாறுபட்டவராக இருந்தார். ஜெபமே அவருடைய வாழ்க்கையின் மையமாக இருந்தது. அவரது வாழ்க்கை சரித்திரத்தை எழுதிய ஜான் போலக் எழுதுகிறார், “இருபதாம் நூற்றாண்டில் வாழும் வாலிபன் லண்டன் மாநகரில் எத்தனையோ சிற்றின்பங்களை அனுபவித்திருக்கலாம். அவருக்காக ஜெபிக்க வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருந்தது, அவரோ தனக்காக அல்ல தன்னுடன் பணி செய்யும் 139 பேருக்காகத்தான் அதிகமாக ஜெபித்தார். அவர்களது பெயர்களையெல்லாம் நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்து, அவர்களின் இரட்சிப்பிற்காய் தேவனிடம் மன்றாடுவார். அந்த கடையில் சேர்ந்த பொழுது ஒரு கிறிஸ்தவர்தான் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குள்ளாய் 20 பேர் இயேசுவை ஏற்றுக் கொண்டனர். 

வில்லியம்ஸ் பன்னிரண்டு பேரை சேர்த்து ஜெபித்து, ஒரு சங்கம் ஆரம்பித்தார். அவர்கள் எல்லா ஜவுளி கடைகளுக்கும் கடிதம் எழுதி ஆட்களை அழைத்தார்கள். 150 வாலிபர்கள் முதல் நாள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அந்த சங்கத்திற்கு Y.M.C.A கிறிஸ்தவ வாலிபர் சங்கம் என்று பெயரிட்டார். அது வளர்ந்து, மற்ற ஊர்களிலும், தேசங்களிலும் பரவலாயிற்று. ஒரு தனி வாலிபன் தன் வாழ்க்கையை தேவனோடு இணைத்து ஜெபிக்கின்ற மனிதனாய் இருந்ததால் தேசமெங்கிலும் எழுப்புதல் உண்டாக காரணமாய் இருந்தான்.

வேதத்திலும் கூட எலியா தீர்க்கதரிசி தனி மனிதனாய் பலத்த அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தார். அவர் அடிக்கடி சொல்கின்ற வார்த்தை “சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனை கொண்டு சொல்கிறேன்” என்பார். இவரால் எப்படி அவ்வளவு தைரியமாய் சொல்ல முடிந்தது. தேவனோடு உறவாடி ஜெபிக்கின்ற மனிதனாய் காணப்பட்டார். இதன் விளைவு பாகாலை பின்பற்றின திரள் கூட்ட ஜனம், கர்த்தரே தெய்வம்! கர்த்தரே தெய்வம் என்று அறிந்து கொண்டார்கள். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! ஜெபம் நம் மூச்சைப்போன்றது. மூச்சு நின்று போகும் என்றால் ஜீவன் போய் விடுகிறது. நம்முடைய ஜீவியத்திற்கு ஜெபம் மிகவும் அவசியம். என்னை ஆசீர்வதியும், என் தொழிலை ஆசீர்வதியும், இந்த மனிதன் மூலமாய் எனக்கு உதவி செய்யும் என்று order  போடுகின்ற ஜெபமாய் அல்ல, மற்றவர்களுக்காகவும், உமக்கு முன்பாக நிற்கின்ற நான் என்று சொல்லுமளவிற்கு நம்முடைய உள்ளம் தேவனோடு கூட எப்பொழுதும் இணைந்திருக்குமென்றால் அந்த ஜெபம் மிகப்பெரிய எழுப்புதலுக்கு பங்குள்ளதாய் மாறி விடும். அல்லேலூயா! 
-    Mrs. ஜீவா விஜய் 

ஜெபக்குறிப்பு:
7000 மிஷனெரிகள், 7000 மிஷனெரிகளை தாங்கும் பங்காளர்கள், 7000 வீட்டு ஜெபக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al jojobet giriş jojobet casibom giriş bets10 extrabet royalbet süperbetin jojobet casibom holiganbet galabet matbet matbet giriş hilbet bahiscasino celtabet antikbet betoffice