Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16.05.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 16-May-2024

இன்றைய தியானம்(Tamil) 16.05.2024

 

தேடுங்கள்

 

"…தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்;…" - மத்தேயு 7:7

 

இந்த உலகில் வாழ்கின்ற எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு காரியத்தை தேடிக் கொண்டே இருக்கிறோம். சிறுவயதாயிருக்கும் போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக நல்ல கல்வி நிலையங்களை தேடுகிறார்கள். படிப்பை முடித்தவுடன் வேலைக்காக கம்பெனிகளை தேடுகிறோம். சிலர் எதிர்காலத்திற்காக எந்தத் தொழிலை செய்தால் ஆசீர்வாதமாக இருக்க முடியும் என்பதைக் குறித்ததான காரியங்களைத் தேடுகிறோம். வயது முதிர்நதவுடன் நமது உடல் ஆரோக்கியத்திற்காக சிறந்த மருத்துவமனைகளைத் தேடுகிறோம். இந்த உலகில் நாம் வாழும் வரை நமது தேடுதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. மலைபிரசங்கத்திலே, ஆண்டவர் நாம் எதைத் தேட வேண்டும்? எதைத் தேடும்பொழுது கண்டடைவீர்கள் என்று சொல்கிறார் என்பதை சிந்திப்போம்.

 

தேவனைத் தேட வேண்டும்: (நீதிமொழிகள் 8:17)

முதலாவது தேவனைத் தேட வேண்டும். இரண்டு வழிகளில் நாம் ஆண்டவரைத் தேட முடியும். முதலாவது ஜெபம். தானியேல் 9:3ல் தானியேல் ஜெபத்தில் ஆண்டவரைத் தேடுகிறார். இரண்டாவது வேதம். ஏசாயா 34:16ல் கர்த்தருடைய புஸ்தகத்தில் தேடி வாசியுங்கள். நம்முடைய ஆண்டவர் எப்படிப்பட்டவர், அவருடைய குணங்கள், வழிகளைக் குறித்து வேதத்திலே தேடுகிறவர்களாக நாம் இருக்க வேண்டும்.

 

பிதாவின் சித்தத்தை தேட வேண்டும்: (யோவான் 5:30)

நமது விருப்பத்தை நிறைவேற்றுகிறதற்காக வாழ்க்கையில் செயல்களை செய்து கொண்டிருக்கிறோமா? அல்லது பிதாவின் சித்தத்தை அறிந்து அதன்படி செயல்படுகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்.

 

ஆத்துமாக்களை தேட வேண்டும்: (லூக்கா 19:10)

பாவத்தினால் இரட்சிப்பை இழந்து கொண்டிருக்கிற நபர்களை நாம் தேடிச் சென்று அவர்களுக்கு இயேசுவின அன்பை அறிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட நபர்கள் உங்கள் தெருக்களிலோ, நீங்கள் பணிசெய்யும் இடங்களிலோ, படிக்கும் கல்லூரிகளிலோ இருக்கலாம். இப்படிப்பட்ட நபர்களை நாம் தேடிச் செல்லுகிறோமா?

 

மேலானவைகளை தேட வேண்டும்:(கொலோசேயர் 3:1,2)

பிறரை ஏமாற்றியோ, பொய் சொல்லியோ, மற்றவர்களை கீழே விழத்தள்ளியோ கிடைக்கிற ஆதாயங்களை நாம் தேடாமல் பரலோகத்திற்கு நம்மை கொண்டு சேர்க்கக் கூடிய மேலான காரியங்களையே நாம் தேடுகிறவர்களாக இருக்க வேண்டும்.

 

பிரியமானவர்களே! நாம் இவ்வுலக ஆசீர்வாதங்களுக்காகவோ, சுயபிரயோஜனத்திற்காகவோ ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை தேடுகிறவர்களாக வாழ்வோமானால் நமது நிலை பரிதாபத்திற்குரியதே! நாம் அவருடைய சித்தத்தின்படி தேடுகிறபோது ஆசீர்வாதங்களை தேவன் நமக்குத் தந்தருளுவார்.

- Mrs. ஜெபக்கனி சேகர்

 

ஜெபக்குறிப்பு:

நமது ஊழியர்களின் பிரயாணங்களில் தேவ பாதுகாப்பு காணப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al