Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15.05.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 15-May-2024

இன்றைய தியானம்(Tamil) 15.05.2024

 

எரிகோ மதில் இடியும்

 

"பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும்" - ஏசாயா 58:11

 

நம்முடைய சரீரத்துக்கு தேவையான அநேக எச்சரிப்பான காரியங்களை Social Media க்களில் மற்றும் புத்தகங்களில் படிக்கும் போது, பார்க்கும் போது அந்தக் காரியங்களை நாம செயல்படுத்த முயற்சிக்கிறோம். ஏனென்றால் அது நம்முடைய சரீர ஆரோக்கித்திற்கான மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என நினைக்கிறோம். அதே போல ஆண்டவர் நமக்கு சில எச்சரிப்பான வசனங்கள் மற்றும் வாக்குத்தத்தங்களை வேதத்திலே கொடுத்திருக்கிறார். இந்த எச்சரிப்பான வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால் இந்த ஆசீர்வாதத்தை நாம் சுதந்தரித்து கொள்ள முடியும். நாம் அநேக நேரங்களிலே வேதாகமத்திலே வாக்குத்தத்தங்களை தேடி வாசிக்கிறோம் வாக்குத்தத்தங்களை விரும்புகிறோம். ஆனால் எச்சரிப்பான வசனங்களை விட்டு விடுகிறோம். அதற்கு கீழ்ப்படிய மனமில்லை. வாக்குத்தத்தங்கள் நிறைவேற வேண்டுமென்றால் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும். அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

 

அநேக நேரங்களில் நாம் வாக்குத்தத்தமான பாடல்களை பாடுகிறோம். "துதித்தால் ஆண்டவர் ஆசீர்வாதத்தை தருவார்" என கேட்கும் போது நாமும் நன்றாக துதிக்கிறோம். நல்லது தான்! ஆனால் துதித்தால் மட்டும் நமக்கு ஆசீர்வாதம் வந்து விடாது. வேதத்திலே பார்ப்போமானால் எரிகோ பட்டணத்திற்கு விரோதமாக போர் செய்யும்படி யோசுவா ஜனங்களை நடத்துகிறார். அப்பொழுது ஆண்டவர் யோசுவாவுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை தருகிறார். கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன். ஆனால் இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க வேண்டுமென்றால் ஆண்டவர் சில நிபந்தனைகளை சொல்லுகிறதை நாம வேதத்திலே பார்க்க முடியும். என்ன நிபந்தனைகள் என்றால், ஆறுநாள் எரிகோவை சுற்றி வர வேண்டும். ஏழாம் நாளிலோ ஏழு முறை சுற்றி வரும்போது எக்காள சத்தம் கேட்கும் போது ஆர்ப்பரிக்க வேண்டும். இதுதான் ஆண்டவர் நியமித்த நிபந்தனை. எல்லா நாட்களும் அவர்கள் ஆர்ப்பரிக்கவில்லை. ஆண்டவர் சொன்ன அந்த நாளிலே அந்த நிமிடத்திலே ஆர்ப்பரித்தார்கள்.  

 

இதிலே நாம் கவனித்தோமானால் ஆண்டவர் சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படிந்து துதித்தார்கள். உண்மைதான் ஆனால் துதித்ததால் மாத்திரமல்ல ஆண்டவர் சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததினால் மாத்திரமே எரிகோ மதில் விழுந்தது. இதை நாம் கவனத்தில் கொண்டு ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதை நாம் தெரிந்து கொண்டால் வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்பது கடினமான ஒன்று அல்ல. ஆண்டவர் சொன்ன வாக்குத்தத்தங்களை நிச்சயமாகவே நமக்கு நிறைவேற்றித் தருவார். எனவே ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்போம்.

- Mrs. உமா வில்லியம்ஸ்

 

ஜெபக்குறிப்பு: 

நமது வளாகத்திற்கு சாலை மற்றும் பாலங்கள் போட தேவன் கிருபை செய்ய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş