Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13.05.2024
Share:

By Village Missionary Movement

Monday, 13-May-2024

இன்றைய தியானம்(Tamil) 13.05.2024

 

விசுவாசததின் பலன்

 

"விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்;…" - மாற்கு 16:17

 

ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் என்ற விசுவாச வீரருக்கு ஒரு தந்தி வந்தது. அதென்னவென்றால் 200 மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு வீட்டிற்கு உடனே வரும்படி அழைப்பு வந்தது. அவர் அவசரமாய் சென்று பார்த்தால் 5 பேர் ஒரு பெண்ணை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் அந்தப் பெண்ணுக்கு பிசாசின் தொல்லையிருந்தது. ஸ்மித் போய் ஜெபித்ததும் அந்த பிசாசு சொன்னது, "நாங்கள் 37 பேர், எங்களை விரட்ட உன்னால் முடியாது நீ சென்று விடு" என்றது. ஆனால் அவர் உலகத்திலிருப்பவனிலும் என்னில் இருக்கிறவர் பெரியவர் என்று சொல்லி அதிகாரத்தோடு ஜெபித்தார். அந்த பிசாசுகள் வெளியேறின. அந்தப் பெண்ணின் முழுக்குடும்பமும் தேவனை ஏற்றுக் கொண்டனர்.

 

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் உலாவிய நாட்களில் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிற தன் மகனை, அந்த தகப்பன் சீஷர்களிடத்தில் கொண்டு வந்தார். அவர்களால் மகனை சுகப்படுத்த முடியவில்லை. அப்போது இயேசுவிடம் இதைத் தெரிவித்தும், "விசுவாசமில்லாத சந்ததியே" என சீஷர்களை கடிந்து கொண்டார். கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் மலையைப் பார்த்து இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அப்புறம் போகும் என்றார். அதே போல் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாய் ஜெபத்தில் கேட்பவை எல்லாம் நடக்கும் என்றார். ஆம், விசுவாசம் பெரிய பலனைத் தரக்கூடியது. உங்களுக்கான போராட்டங்கள், கவலைகள், பிசாசின் போராட்டங்களில் வல்லமை பெற்ற ஊழியர்களைத் தேடி செல்ல வேண்டியதில்லை. அவர்களுக்குள் இருந்து செயல்படும் தேவன் உங்களுக்குள்ளும் இருக்கிறார். விசுவாசத்தின் அளவு மாறுபடுவதால் தான் அவர்களால் அற்புதம் நடக்கிறது. விசுவாசம் கடுகு விதையளவு சிறியதாய் இருந்தாலும் மலை போன்ற பெரிய காரியங்களும் நடக்கும்.

 

அன்பரே! ஊறுகாய் நீண்ட நாட்கள் நன்றாயிருப்பதற்கு உப்பை சிறிது கூடுதலாய் போட வேண்டியுள்ளது. அதுபோல் நீங்கள் கர்த்தரிடத்திலிருந்து நிலையான சுகத்தை, ஆசீர்வாதத்தைப் பெற விசுவாசம் தேவையாயுள்ளது. அதிகம் அல்ல கடுகு விதையளவு போதும். நமக்கு அந்தளவு விசுவாசம் இல்லாததால் தான் ஊழியர்களை சார்ந்து விடுகிறோம். ஊழியர்களை அழைத்து ஜெபிப்பது தவறேயல்ல, ஆனால் ஊழியர்களை மட்டுமே சார்ந்து விடுவது சரியானதல்ல. நமக்குள் இருக்கும் தேவனின் வல்லமையை அறிந்து அவரை சார்ந்து கொள்ளும் போது, தேவன் நம் மூலமும் பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.

- Mrs. ஜாஸ்மின் பால்

 

ஜெபக்குறிப்பு: 

இன்று நடைபெறும் நம்முடைய மிஷனெரிகள் கோபி-மரியா திருமணத்தில் தேவ கரம் உடனிருக்க, தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş