Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.05.2024
Share:

By Village Missionary Movement

Friday, 10-May-2024

இன்றைய தியானம்(Tamil) 10.05.2024

 

முதிர்வயதிலும் பசுமை

 

"…முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்" - சங்கீதம் 92:15

 

நாற்பது வயதினைத் தாண்டியவுடனே கொஞ்சம் நரைமுடி தெரிய, சரீரத்தில் கொஞ்சம் வலி வேதனைகள், பார்வைக் குறைபாடு, பிரஷர், சுகர் கூடி குறைவது போலிருந்தால் போச்சுடா அவ்வளவு தான் வயசாகிவிட்டது என்ற எண்ணம் மேலோங்கும். அரசு வேலையில் ஓய்வு கொடுத்திட்டாங்கண்ணா அவ்வளவுதான் வீட்டின் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டு பொழுது போக்கிக் கொண்டு என் மரண நாட்களை எண்ணி கொண்டிருக்கிறேன் என்கிற டயலாக் பேசி வாழ்பவர்கள் உண்டு. ஆனால் வயது, பெலவீனம் இவற்றைத் தாண்டி தேவனுக்காய் செயல்படுவோர் இன்றும் உண்டு.

 

தாமஸ் மேத்யூ சீனியர் என்பர் வணிகர், நிலத்தின் உரிமையாளர், எலிசபெத் தீவின் ஆளுநர். இவரது மகன் தாமஸ் சீனியர் அத்தீவின் மக்களிடம் ஊழியம் செய்தார். கப்பலில் நிதி திரட்டும் படி இங்கிலாந்து சென்ற மகன் திரும்பி வரவே இல்லை. மகனை இழந்த துக்கம் இருந்தாலும், மகன் விட்டுச் சென்ற ஊழியத்தை தொடர விரும்பின தாமஸ் மேத்யூ பலரை ஊழித்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அத்தீவின் மொழி தெரியாததால் யாரும் முன்வரவில்லை. தன்னுடைய எழுபது வயதில் அத்தீவின் மொழியைக் கற்று அங்கு ஊழியம் செய்ய தன்னை அர்ப்பணித்தார். இருபது மைல்கள் காடுகளில் நடந்து சென்று சுமார் மூவாயிரம் ஆத்துமாக்களை இரட்சிப்பிற்குள் வழிநடத்தினார்.  

 

வனாந்திரத்தில் தன்னுடைய மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மோசேக்கு முட்செடியின் நடுவில் மோசேயை தன்னுடைய ஊழியத்தை செய்யும் படியாய், இஸ்ரவேல் ஜனங்களை பாலும் தேனும் ஓடும் கானானுக்கு வழிநடத்தி செல்லும்படியாய் தெரிந்து கொண்டார். அநேக அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து மோசேயை அழைக்கிறார் தேவன். தான் திக்குவாயன் என மோசே சாக்கு போக்கு சொல்ல, "ஆரோன் உனக்கு வாயாக இருப்பான், உன்னை எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு தேவனாக்கினேன்" என்றார். பார்வோனுக்கு முன்பாக மோசேயும் ஆரோனும் நின்ற போது மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்து மூன்று வயதுமாய் இருந்தது. (யாத். 7:7)  

 

ஆம், பிரியமானவர்களே! தம்முடைய வல்லமையை தேவன் உங்களைக் கொண்டு நிரூபிக்க உங்கள் வயது தடையல்ல. மோசேயை கொண்டு அநேக அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்தார். இஸ்ரவேலின் தேவனைத் தவிர வேறே தேவர்கள் இல்லை என்பதை பூமியின் சகல ஜாதிகளும் அன்று அறிந்தார்கள். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி உங்களை நீங்களே முடக்கிக் கொண்டு இருக்கிறீர்களா? தேவனுக்காக செயல்பட வயது தடையில்லை. மனதில் வாஞ்சை இருந்தால் போதும். தேவனுக்காய் ஏதாவது ஒரு காரியத்தை செய்யும் வாய்ப்பை, பெலனை, கிருபையை தருவார். ஆமென்.

- Sis. மஞ்சுளா

 

ஜெபக்குறிப்பு: 

நமது ஆமென் வில்லேஜ் டிவி சேனல் சேட்டிலைட் சேனலாக மாற்றப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al