Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09.05.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 09-May-2024

இன்றைய தியானம்(Tamil) 09.05.2024

 

உயிரோடிருக்கும் தேவன்

 

"மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” -வெளிப்படுத்தல் 1:18

 

"யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்" என்ற பாடலை பரவசத்துடனும், மகிழ்ச்சியுடனும் பாடி உயிர்த்தெழுதலின் பண்டிகையைக் கொண்டாடி முடித்திருக்கிறோம். இப்பொழுது அந்த உயிர்த்தெழுந்த இயேசு எங்கே? என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நாம் யோசித்து பார்த்திருக்கிறோமா?

 

கடைசி காலத்தில் நிகழப்போகிற காரியங்களை குறித்து, அன்பின் சீஷனாகிய யோவான் பத்மு தீவில் இருந்த போது, தேவன் அவருக்கு வெளிப்படுத்தினார். இயேசுவின் மார்பில் சாய்ந்து அவருடன் நெருங்கிய உறவாய் இருந்த யோவானுக்கு இப்பொழுது அவரைப் பார்த்தவுடன் எப்படிப்பட்ட உணர்வு இருந்திருக்கும். எக்காள சத்தத்தைப் போன்ற சத்தத்தைக் கேட்டார், முந்தினவரும், பிந்தினவரும் உயிருள்ளவருமாய் இருக்கிறேன் என்றவரின் சத்தத்தைக் கேட்டு திரும்பிய போது அவர் கண்ட காட்சி என்ன? ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில், நிலையங்கி தரித்தவராய், மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கு ஒப்பானவரைக் கண்டான். அவர் சிரசும் மயிரும் பஞ்சைப் போலவும், பெருவெள்ளத்து இரைச்சல் போலவும் அவர் தம் கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டவராய், அவரது வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தையும், அவரது முகம் வல்லமையாய் பிரகாசிக்கும் சூரியனைப் போலிருந்தது.

 

இவ்வளவு மகத்துவமும், வல்லமையும் நிறைந்த ஆண்டவரை யோசித்திருக்கிறோமா? பார்த்தால் நம்மால் தாங்க முடியாது. அவரோடு முகமுகமாய் பேசின யோவானாலேயே தாங்க முடியவில்லை. செத்தவனைப் போல அவருடைய பாதத்தில் விழுந்தார். அவர் மனுஷ குமாரனாக வாழ்ந்த நாட்கள் 331/2 வருடங்கள் தான். ஆனால் நித்திய ஜீவியாய் நீண்ட ஆயுசுடையவராய் முன்னே உலகத் தோற்றத்திற்கு முன் பிதாவுடனே இருந்தவர். இன்றும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்கிறார்.

 

ஆம், இப்படிப்பட்ட வல்லமையும், மகத்துவமும் நிறைந்த உன்னதமான தேவனை நாம் பெற்றிருக்கிறோமே! அவருக்கு பயப்படுகிறோமா? இல்லை ஏதோ பரிதாபமாய் சிலுவையில் மரித்த மனிதனை போல எண்ணி அலட்சியப்படுத்துகிறோமா? அவர் மரித்த கிறிஸ்துவாக இல்லை உயிர்த்த ஜீவனுள்ள தேவனாய் இருக்கிறார். நமக்காக யாவையும் செய்து முடிப்பவரும் அவரே. மரித்தவராக இல்லை, என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளும் ராஜாதிராஜாவாய் இருக்கிறார். அவருக்கே மகிமையையும், கனத்தையும் செலுத்துவோம். ஆமென்!

- Mrs. புவனா தனபாலன்

 

ஜெபக்குறிப்பு:

சிறுவர் முகாம்களில் சந்திக்கப்படும் சிறுவர்கள் மூலம் அவர்களின் பெற்றோர்களும் தேவனின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş