Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05.05.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 05-May-2024

இன்றைய தியானம்(Tamil) 05.05.2024 (Kids Special)

 

VBS வந்தாச்சு

 

"நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்;…" - மத்தேயு 11:29

 

Summer leave விட்டாலே ரொம்ப ஜாலிதானே குட்டீஸ். Homework கிடையாது, school கிடையாது. எல்லாத்துக்கும் மேல நல்லா தூங்கி Late -டா எழும்பலாம். சந்தோஷம் தானே குட்டீஸ் லீவு நாட்களில் ஊருக்கு போவீங்களா? VBS - ஐ miss பண்ணிடக் கூடாது. Ok வா குட்டீஸ்.

 

எல்லா exam- ம் முடிந்து விட்டது ஹய்யா jolly தான் என்று சந்தோஷத்தோடு வீட்டிற்கு வந்த சாமை பார்த்தான் அவனுடைய அத்தை மகன் வசந்த். ஹாய் என்று அவனுடைய கையை குலுக்கி இனிமேல் நல்லா கிரிக்கெட் விளையாடலாம் என்று இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆமா, இந்த லீவுக்கு நீ எங்கேயும் போகலயா? என்று கேட்டுக் கொண்டே வசந்த் சொன்னான், "நாங்க மே மாதம் 6 முதல் 10 வரை ஜாலியாக டூர் போறோம். நீயும் வர்றியா?" என்று கேட்டான். என்னோட அப்பாகிட்ட கேட்டு சொல்றேன்டா என்றான் சாம்.

 

அடுத்த நாள் காலையில் சாம் வீட்டில் குடும்பமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "அப்பா, வசந்த் வீட்டில் எல்லோரும் சுற்றுலா போறாங்களாம். நானும் மாமா கூட போகட்டுமா?" என்றான். அப்பா சொன்னாங்க சாம் குட்டி மே 1 முதல் 10 வரை VBS இருக்கு. VBS-ல் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்குது. வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான VBS நடத்துவாங்க. நீ கண்டிப்பா கலந்து கொண்டால் உனக்கு ரொம்ப பிரயோஜனமாய் இருக்கும். நீ miss பண்ண கூடாது VBS முடித்து நாம் சுற்றுலா போகலாம் என்று சொன்ன அப்பாவை பார்த்து டீல் Ok பா. நீங்க சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும்ப்பா என்று சொன்ன சாமை பார்த்து எனக்கும் இந்த டீல் Ok என்று சொல்லி சாப்பிட்டும் முடித்தார்கள். உங்க டீல்ல என்னை மறந்து விடாதீங்க என்று சொன்ன அம்மாவை பார்த்து இரண்டு பேரும் சிரித்து விட்டார்கள். இயேசப்பாவை முதலில் தேடும் போது மற்ற எல்லாவற்றையும் ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்று அம்மா சொன்னதும் Ok ok சரியா சொன்ன என்று அப்பா சொல்ல, குடும்பமே சந்தோஷ அலையில் நிறைந்திருந்தது.

 

என்ன குட்டீஸ் இந்த summer leave நாட்களில் VBS-ஐ miss பண்ணிடாதீங்க. உங்க வாழ்க்கை மாறும், நீங்க ஆசீர்வதிக்கப்படுவீங்க. சாமைப் போல இயேசப்பாவுக்கு முதலிடம் கொடுங்க. உங்க ஆசையை இயேசப்பா நிறைவேற்றுவாங்க. Ok தானே குட்டீஸ்.

- Mrs. கிரேஸ் ஜீவமணி

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al