Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24.04.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 24-Apr-2024

இன்றைய தியானம்(Tamil) 24.04.2024

 

தேவையானது ஒன்றே

 

"தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்றார்" - லூக்கா 10:42

 

ஒரு தகப்பன் அமெரிக்க தேசத்தில் வேலை பார்த்தார். அவருடைய குடும்பமோ தமிழ்நாட்டில் இருந்தது. விடுமுறைக்கென வீட்டிற்கு வந்த அத்தகப்பனர், தன் ஒரே மகனுக்கென அநேக பொருட்களை வாங்கி வந்திருந்தார். தன் மகனிடம் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுத்து அதையெல்லாம் தான் எவ்வளவு பிரயாசப்பட்டு உனக்காக வாங்கினேன் என்றெல்லாம் கூறினார். மகனோ பொருட்களின் மீது ஆர்வம் காட்டவில்லை. தன் தகப்பனின் முகத்தையே சோகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். மகனைத் தழுவி விசாரித்தார். அப்பா இந்த பொருட்கள் எல்லாம் எனக்கு வேண்டாம். நீங்கள் தான் எனக்கு வேண்டும். நீங்கள் அன்போடு இதை வாங்கி வந்தது உண்மைதான், ஆனால் நான் அவைகளுக்காக ஏங்கவில்லை, நீங்கள் என்னோடு கூடவே இருக்கணும். என்னைப் பள்ளியில் போய் விடணும், நான் உங்க மடியில் உட்கார்ந்து Home work செய்யணும், உங்களுடன் விளையாடணும். அதுதான் என் ஆசையாயிருக்கிறது என்றான்.

 

இதை வேதத்திலுள்ள ஒரு சம்பவத்தோடு ஒப்பிடலாம். பெத்தானியாவிலுள்ள மார்த்தாள், மரியாள் என்ற இரு சகோதரிகளின் வீட்டிற்கு இயேசுகிறிஸ்து வந்தார். மார்த்தாள் பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். மரியாள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவர் வார்த்தையைக் கேட்பதும், அவரோடு பேசுவதும் மரியாளின் விருப்பமாய் இருந்தது. ஆனால் மார்த்தாள் வேலை செய்து சோர்வுற்று இயேசுவிடம் போய் தான் தனி ஒருத்தியாக நின்று கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன் என்று புலம்புகிறாள். நீ பல காரியங்களைக் குறித்து கலங்குகிறாய், கவலைப்படுகிறாய். தேவையானது ஒன்றுதான், அதை மரியாள் தெரிந்து கொண்டாள் என்றார் இயேசு.

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உலகத்தில் வாழுகின்ற மகன் தன்னுடைய தகப்பன் எவ்வளவு பொருட்கள் வாங்கி வந்தாலும் தகப்பனுடைய அன்பை தான் எதிர்பார்க்கின்றான். இதைப்போல உங்களையும் என்னையும் படைத்த ஆண்டவர் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா? அவர் சமூகத்தில் காத்திருக்க வேண்டும். நாம் எவ்வளவு காணிக்கை கொடுத்தாலும், பிறருக்கு உதவி செய்தாலும், ஊழியம் செய்தாலும் நாம் அவரோடு அமர வேண்டும். நேரம் செலவு பண்ண வேண்டும். ஆம், நாம் அவர் பாதத்தில் காத்திருப்போம். சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக் கொள்ளுவோம்.

- Sis. பாத்திமா

 

ஜெபக்குறிப்பு: 

நமது ஊழியங்களை ஆதரிக்கும் நபர்கள் ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet