Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  14-04-2021
Share:

By Village Missionary Movement

Wednesday, 14-Apr-2021

இன்றைய தியானம்(Tamil)  14-04-2021

திருப்பிக்கொள்வாய் 

“...ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.” – 1சாமுவேல் 30:19

நயாகரா நீர் வீழ்ச்சியில் ஒரு நிமிடத்திற்கு 50,00,000 டன் தண்ணீர் அருவியாக கொட்டப்படுகிறது. ஆனால் 1848-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி அந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது திடீரென்று நின்றது. மீண்டும் 30 மணிநேரம் கழித்து திரும்ப தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. என்ன நிகழ்ந்தது? ஈரி ஏரி (Lake Erie) என்னுமிடத்தில் ஒரு பெரிய பனிக்கட்டி உடைந்து அது மிதந்து வந்து, நயாகரா நீர் வீழ்ச்சியின் மேற்குமட்டத்தில் அது அடைத்து கொண்டதால் தண்ணீர் போக முடியாதபடி நின்று போனது. திரும்ப வெயில் ஏற ஏற பனிக்கட்டி உருகி தண்ணீர் திரும்ப பாய தொடங்கியது. 

1சாமுவேல் 30-ம் அதிகாரத்தில் தாவீதுக்கு உண்டான எல்லாவற்றையும் அமலேக்கியர் கொள்ளையடித்து, அக்கினியால் சுட்டெரித்து அவர்களைப் பிடித்துக் கொண்டு தங்கள் வழியே போய்விட்டார்கள். இந்நிலையில்தான் தாவீது எல்லாவற்றையும் இழந்தவராக காணப்பட்டார். இந்த இடத்தில் தாவீது எல்லாவற்றையும் இழந்து, ஒன்றுமில்லாத சூழ்நிலையில் அமலேக்கியரை மேற்கொண்டு ஜெயம் பெறுவேனா? ஜெயம் பெற மாட்டேனா? என கர்த்தரிடத்தில் விசாரிக்கிறார். ஆனால் கர்த்தர் தாவீதிடம் சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்கிறார்.  

இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நயாகரா நீர்வீழ்ச்சியை படைத்தவர் நம்முடைய ஆண்டவர்தான். அதிலிருந்து தண்ணீரை பாய செய்வதும் நம்முடைய ஆண்டவர்தான். அதிலிருந்து தண்ணீர் கொட்டாமல் திடீரென்று நிற்க செய்ததும் நம்முடைய ஆண்டவரே. தாவீதையும், தாவீதுக்கு உண்டான எல்லாவற்றையும் உருவாக்கினவர் நம்முடைய கர்த்தர். இதை வாசிக்கின்றதான உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராமல், நேர்மறையாக, நினைக்காத ஒரு காரியம் ஏற்படலாம். எதார்த்தமாய் வாழ்க்கையில் ஏற்படுகின்ற காரியங்களை கண்டு மனம் துவள வேண்டாம். உங்களுக்கு உண்டான செல்வம், புகழ், படிப்பு, சுகம் இவைகளை இழந்துவிட்டீர்களா? இல்லவே இல்லை. நின்று போன நயாகரா வீழ்ச்சியிலிருந்து திரும்ப தண்ணீரை பாய செய்கின்ற நம் ஆண்டவரால், எல்லாவற்றையும் இழந்ததான தாவீதின் வாழ்க்கையில் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டது போல, நீங்கள் இழந்த எல்லாவற்றையும் திருப்பிக்கொள்ளும்படி செய்வார். இழந்துபோன எல்லாவற்றையும் திருப்பிக்கொள்வீர்கள். 
-    Mrs. சக்தி சங்கர்ராஜ் 

ஜெபக்குறிப்பு:
அர்ப்பணிக்கப்பட்ட 12 மிஷனெரிகளை தேவன் ஒவ்வொரு மாநிலங்களிலும் இருந்து அழைத்துவர ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş