Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.04.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 21-Apr-2024

இன்றைய தியானம்(Tamil) 21.04.2024 (Kids Special)

 

நீ விசேஷமானவள்(ன்)

 

"…அநேகம், அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்" - மத்தேயு 10:31

 

ஒரு காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. அந்த யானை எப்பொழுதும் மற்ற பறவைகளோடும், மிருகங்களோடும் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து, மனம் சோர்ந்து போகும். எப்பொழுதும் கவலையாகவே இருக்கும். ஒருநாள் சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து தாங்க முடியாத துயரமடைந்து எனக்கும் சிறகுகள் இருந்தால் நானும் பறப்பேனே என்று தேம்பி தேம்பி அழுதது. அதற்கு சாப்பிடக்கூட விருப்பம் இல்லை.

 

அங்கே ஒரு அருமையான நைட்டிங்கேல் பறவை இனிமையாக பாடிக் கொண்டிருந்தது. யானைக்கு இன்னும் கவலை அதிகரித்து விட்டது. இந்தப் பறவைகளெல்லாம் இவ்வளவு அழகாக பாடுகிறதே எனக்கு மட்டும் பாடுகிற தாலந்து இல்லையே என்று கவலைப்பட்டு அழுதது. இன்னும் ஒரு வண்ணத்துப்பூச்சி அழகாக மலரின் மேல் அமர்ந்து தேனை உறிஞ்சி சுவைத்துக் கொண்டிருந்தது. யானை அதைக்கண்டதும் தேவன் அதற்கு மட்டும் சுவையான உணவைக் கொடுத்திருக்கிறார். ஆனால் நானோ சுவையற்ற இலைகளை சாப்பிடுகிறேனே என்று புலம்பியது.

 

புள்ளி மான்கள் துள்ளிஓடுவதை யானை கண்டவுடன் "ஐயோ அழகிய புள்ளிமான்களின் நிறம் எனக்கு இல்லையே! வேகமாய் ஓட மெல்லிய கால்கள் இல்லையே என்று கண்ணீர் விட்டது. அங்கே எறும்புகள் பூமிக்கடியில் சென்று வர முடியவில்லையே என்று அழுது கொண்டே இருந்தது. கடைசியில் அந்த யானை மிகவும் மெலிந்து பெலவீனப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. அப்பொழுது காட்டிலுள்ள மிருகங்களும், பறவைகளும் அந்த யானையிடம் வந்து "யானையாரே, கர்த்தர் உங்களுக்கு எவ்வளவு வல்லமையும், பெலனையும் தந்திருக்கிறார். எவ்வளவு வலிமையான பெரிய கால்கள் உங்களுக்கு உள்ளது. உங்கள் தந்தம் எவ்வளவு விலையேற பெற்றது. சிருஷ்டிப்பிலே நீங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். உங்களைக் குறித்து "யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே" என்று தேற்றின. அப்பொழுதுதான் கர்த்தர் தனக்குக் கொடுத்துள்ள மேன்மையை எண்ணி தேவனை மகிமைப்படுத்த ஆரம்பித்தது. தன்னை விசேஷமாய் படைத்த தேவனை மறந்து, முறுமுறுத்து விட்டோமே என நினைத்து வருந்தியது.

 

குட்டித் தம்பி, தங்கைகளே! நீங்களும் கூட நான் கருப்பாயிருக்கிறேன், நான் அழகாய் இல்லை, எனக்கு திறமை இல்லை, எனக்கு வசதியில்லையே என்று சொல்லி மற்றவர்களை பார்த்து பார்த்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாயா? நீ எப்படி இருந்தாலும் இயேசப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். ஏனா, நீ இயேசப்பாவோடே பார்வையில் விசேஷமானவன்(ள்).

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al