Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18.04.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 18-Apr-2024

இன்றைய தியானம்(Tamil) 18.04.2024

 

யார் நமது காரியமாய்ப் போவான்?

 

"…யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன்…" - ஏசாயா 6:8

 

நோவா, ஆபிரகாம், தாவீது, மற்றும் தீர்க்கதரிசிகளும் கர்த்தரின் காரியங்களை அவரது விருப்பப்படி செய்தனர். புதிய ஏற்பாட்டிலும் சீஷர்கள், அப்போஸ்தலர்கள், விசுவாச மக்கள் பெரிய காரியங்களை தேவனுக்காகச் செய்தனர். மிஷனெரிகளும், ஏராளமான ஊழியர்களும் இன்று வரை தேவனுக்காய் செயல்படுகிறவர்களாக இருந்தாலும் தேவன், இன்னும் செயல்படும் செயல்வீரர்களைத் தேடிக் கொண்டேதான் இருக்கிறார்.

 

ஒரு பக்தன் இவ்வாறாக பாடுகிறார்: "தேவன் தேடும் நபர் நம்மிலே யார்யாரோ?" ஆண்டவரின் பணியைச் செய்ய, அவருடைய காரியமாப் போக, தேவன் சிறப்பான நபர்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறார். இவர் மனிதர் பார்க்கிற வண்ணம் பார்ப்பதில்லை. உலக மனிதர்கள் வெளியரங்கத்தையே பார்த்து எடை போடுவார்கள். வெளிவேஷமாய் திரிகிறார்கள். அதற்குரிய பலனை இம்மையிலேயே அடைந்து தீர்ந்து விடுவார்கள். அவர்களுக்கு பெயர், புகழ், பட்டம், பதவி எல்லாம் கிடைத்து விடும். மறுமையில் அவர்கள் பொக்கிஷம் வெறுமையாகவே இருக்கும். "இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்." (1கொரிந்தியர் 15:19)  

 

நாம் பார்வைக்கு ஊழியம் செய்யாமல், உலக மேன்மையை வெறுத்து, தேவ மகிமைக்காகவும், பரலோக பொக்கிஷத்திற்காகவும் செயல்படுவோமானால் தேவன் தேடுகிற நபர் நாமாகத்தான் இருப்போம்.  

 

பத்தொன்பது வயதிலேயே திபெத்தை நோக்கிச் சென்ற சாது சுந்தர்சிங் திபெத்திய லாமாக்களால் பிடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார், பாழடைந்த கிணற்றில் போடப்பட்டார், அற்புதமாய் தேவனால் விடுவிக்கப்பட்டார். காடுகளிலும், மலைகளிலும் உள்ள கிராமங்களுக்கு கால்நடையாய் சென்று சுவிசேஷத்தை பிரசங்கித்தார். "இரத்தம் சிந்தும் பாதகங்களுடைய அப்போஸ்தலன்" என்றும் "இந்திய அப்போஸ்தலன்" என்றும் அழைக்கப்பட்டார். தேவன் தேடித் தெரிந்து கொண்ட நபராக சாது சுந்தர்சிங் இருந்தார்.

 

இன்றும் நமது காரியமாய் யார் போவார்? என்று திரியேக தேவன் தேடுகிறார். அழைக்கும் அவர் குரலுக்கு செவி கொடுப்போம். கடைசி கால இந்த பதினோராம் மணி வேலையிலும் ஒரு மணி நேரமாவது தேவனுடைய காரியங்களை செய்து தேவனுடைய பரலோக பாக்கியத்தைப் பெற இவ்வுலகில் பிரயாசப்படுவோம்.

- D. செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

நாம் பயன்படுத்தும் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் விபத்தின்றி செயல்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al