Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.04.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 17-Apr-2024

இன்றைய தியானம்(Tamil) 17.04.2024

 

கிறிஸ்துவின் பணி

 

"…இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்" - லூக்கா 18:28

 

ஆர்தர் மர்காஷியஸ் ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர் அல்ல. ஆஸ்துமா நோயால் அவதியுற்று வந்தவர். ஆனால் தான் விரும்பி ஏற்றுக் கொண்ட ஊழியத்தை நிறைவேற்றுவதில் ஊக்கமும், ஆற்றலும் கொண்டவர். இவர் தன்னை ஊழியம் செய்ய அர்ப்பணித்த போது வயது 22. மருத்துவக்கல்லூரியில் படித்து முதுநிலை தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் சமயம் மிஷனெரி ராபர்ட் கால்டுவெல் அவர்களின் அறைகூவலான பேச்சு இந்தியாவின் தென்கோடிக்கு இவரை அழைத்து வந்தது. இவரது முழுமையான ஊழிய அர்ப்பணத்தின் விளைவில் உருவானது தான் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத். இன்றும் இவர் செய்த ஊழியம் பற்றி பேசப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியை சுற்றியுள்ள அநேக கிராமங்கள் கிறிஸ்தவ கிராமங்களாகவும், கிறிஸ்துவின் வாசனை உடையவர்களாகவும் மாறியுள்ளனர். இவரால் செய்யப்பட்ட சமுதாய பணிகளும் அநேகம். காரணம் கிறிஸ்துவின் பணியை மேலாக கருதினார்.

 

விசுவாசத்தினாலே மோசே பெரியவனான போது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொண்டு இனிவரும் பலன் மேல் நோக்கமாயிருந்து எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.  

 

பிரியமானவர்களே! கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து செத்ததேயாகில் அதிக பலனைக் கொடுக்கும் என்ற வசனத்தின்படி கிறிஸ்துவிற்காகவும், அவரின் இராஜ்ஜியத்திற்காகவும் தங்களுடையதை இழந்தவர்கள் ஏராளம், ஏராளம். காரணம் கிறிஸ்துவின் இராஜ்ஜிய பணியை மேன்மையாக எண்ணினார்கள். நம்முடைய தாய் மண்ணில் வெளிநாட்டு மிஷனெரிகள் சிந்தின இரத்த துளிகளின் மேல் தான் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர்களால் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்கள் இன்றும் அவர்களின் தியாகங்களை நினைவுபடுத்துகிறது. ஒருவர் கிறிஸ்துவுக்காக இழந்த காரியங்களை இந்த உலகம் மறந்து போகலாம். ஆனால், கிறிஸ்துவின் பணிக்காக இழந்த எல்லாவற்றையும் பரலோகம் அவர்களுக்கு திரும்ப கொடுக்கும். எனவே, இவ்வுலகில் கிறிஸ்துவுக்காக பாடுகளை அனுபவிப்பதை சந்தோஷமாகவும், மேன்மையாகவும் கருதுவோம்.

- Mrs. ரூபி அருண்

 

ஜெபக்குறிப்பு: 

நமது ஆமென் வில்லேஜ் டிவி நிகழ்ச்சிகளில் வசனம் மற்றும் பாடல்கள் பாடுகின்ற சிறுவர்களின் எதிர்காலத்திற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al