By Village Missionary Movement
Tuesday, 16-Apr-2024இன்றைய தியானம்(Tamil) 16.04.2024
தண்ணீர் பாய்ச்சிடு
"உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன்தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்" - நீதிமொழிகள் 11:25
இறைக்கிற கிணறுதான் ஊறும் என்பது நம் யாவருக்கும் நன்கு தெரிந்த ஒரு பழமொழி. தண்ணீர் மட்டுமல்ல நமது அறிவையும் கூடத்தான். ஜோனாஸ் சால்க் என்பவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்றார். வைரஸ் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில் அவருக்கு வேலை கிடைத்தது. இன்னும் ஃபுளு காய்ச்சலுக்கு சரியான மருந்து கண்டுபிடிக்கும் பணியும் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் அநேக காரியங்களை கற்றுக் கொண்டார். ஆனால் அதைவிடத் தனது அயராத உழைப்பை உலகிற்கு கொடுத்தார். தன் நண்பர்களோடு சேர்ந்து போலியோ ஒழிப்புக்கான வைரஸைக் கண்டுபிடித்தார். அந்த மருந்தை 1955ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் பயன்படுத்தினார்கள். இதனால் போலியோ வியாதியானது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதை நாம் அறிவோம். கண்டுபிடிப்புகளை தாமாகவே பயன்படுத்தியிருப்பாரானால் அது யாருக்கும் எந்த நன்மையும் தந்திருக்காது.
வேதத்தில் சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்தி கொலை செய்யும்படி இருந்தான் இவரை இயேசு என்கிற நாமம் சந்தித்தது. உடனே சவுல் தாமதமின்றி கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். சவுல் தான் பெற்ற இரட்சிப்பை வெளியரங்கமாய் அறிவித்தார். மேலும் தான் பெற்றுக் கொண்ட இரட்சிப்பின் அனுபவத்தையும், தன்னை சந்தித்ததான இயேசுவையும் மறைத்து வைக்காமல் மற்ற புறஜாதியாருக்கும் வெளியரங்கமாக வீடுகள் தோறும் பிரசங்கித்து உபதேசம் பண்ணினான். ஆகையால் சவுல் என்று சொல்லக் கூடிய பவுல் பிறரும் இயேசுவை அறிய வேண்டும். பரலோக வாசிகளாக மாற வேண்டும் என பிரயாசப்பட்டார்.
பிரியமானவர்களே, உலகில் கிடைக்கும் மதிப்பையும் விருதுகளையும் விட நமக்குப் பேரானந்தம் தருவது என்னவென்றால், நமது இரட்சிப்பின் அனுபவத்தை சந்தோஷங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுதான். இதன் விளைவாக கிடைக்கும் மனதிருப்தியே பரலோகத்திலும் நினைவுகூரப்படும். அதுதான் ஆத்தும ஆதாயம், நற்செய்தி அறிவிப்பது. சாதாரணமாக இலவசமாக கிடைக்கின்ற பொருட்களுக்கு பலவிதமான விளம்பரங்கள். ஆனால் இயேசு என்கிற நாமமும், அவர் கொடுக்கும் நித்திய வாழ்வையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவராலும் சும்மாவே இருக்க முடியாது. பிறர் நலன் கருதி இயேசுவை அறிவிக்கத் தூண்டப்பட்டுக் கொண்டேயிருப்போம்.
- Bro. குணசீலன்
ஜெபக்குறிப்பு:
கண்மணியே கேள் நிகழ்ச்சி மூலம் சந்திக்கப்படும் வாலிப பெண் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864