Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.04.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 07-Apr-2024

இன்றைய தியானம்(Tamil) 07.04.2024 (Kids Special)

 

இயேசுவின் சித்தம்

 

"எனக்குச் செவி கொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்” - நீதிமொழிகள் 1:33

 

ஹலோ குட்டிச் செல்லங்களே! இன்றைக்கு உண்மைச் சம்பவம் ஒன்றை கேட்கப் போகிறோம். இயேசப்பாவோட வார்த்தையைக் கேட்டு, அதின்படி நடந்தால் கிடைக்கும் பாதுகாப்பையும், ஆசீர்வாதத்தையும் சொல்லி முடியாது. என்ன குட்டீஸ், உங்களுக்கும் இயேசப்பாவோட சத்தம் கேட்க ஆசையா? தினமும் வேதம் வாசித்து, ஜெபித்து பாருங்க உங்களுக்கே தெரியும்.  

 

மட்சக்கோ என்ற தாயார் போரில் தன் கணவரை இழந்த துக்கத்தில் செய்வதறியாது திகைத்தார். தன் மூன்று குழந்தைகளுடன் ஹிரோசிமா செல்லும் (ரயிலில் ஏறி) வழியில் தன் பிள்ளைகளை ரயில் செல்லும் போது தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள எண்ணினாள். அப்போது தேவன் நான் உன்னுடனிருக்கிறேன் என இடைபட்டார். உடனே தன் தற்கொலை எண்ணத்தை விட்டு ஹிரோஷிமா சென்று வேலை தேடினார். அப்போது ஒரு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. அங்கு திறமையுடன் வேலை செய்தார். பதவி உயர்வு கிடைத்தது. தன் பிள்ளைகளுடன் தினமும் ஜெபித்து அவர்களை வளர்த்து வந்தார். அப்போது திடீரென்று ஒரு நாள் இவருக்கு சம்பள உயர்வு கொடுப்பதாக நிர்வாகத்தினர் அழைத்து சொன்னார்கள். ஆனால் அன்று இரவு தேவன் வேலையை விட்டு அந்த இடத்தை விட்டு போகும்படி கூறினார். உடனே மட்சக்கோ அம்மையார் எதையும் யோசிக்காமல் வேலையை விட்டு ஹிரோஸிமாவை விட்டு அருகிலுள்ள மலைக்கு சென்றார். அடுத்த நாளே அமெரிக்க கிரோஸிமா மீது குண்டு வீசியது. கீழ்ப்படிந்த மட்சுக்கோ குடும்பமாக காக்கப்பட்டனர். பின் கடினமாக வேலை செய்து பிள்ளைகளை வளர்த்து வந்தனர். தினமும் வேதம் வாசித்து ஜெபிப்பதை மறக்கவே மாட்டார். பிள்ளைகளை கர்த்தரின் ஊழியத்திற்கென்று அர்ப்பணித்து வளர்த்தார். மூவரும் மிஷனெரிகளாகச் சென்றனர். மூன்று குழந்தைகளில் ஒருவர் ஜமேக்காவிற்கும், ஒருவர் ஆப்பிரிக்காவிற்கும் மற்றொருவர் இந்தியாவிற்கும் மிஷனெரியாக வந்து பணியாற்றினர். மட்சுக்கோ அம்மையார் தனக்கென்று யாரும் இல்லை என்று எண்ணி கைவிடப்பட்ட நிலைமையிலிருந்து தற்கொலை செய்ய முயன்ற போது தேவன் விடாமல் அவர்களோடு பேசி உடனிருந்து நடத்தினார்.

 

இதேபோல அன்பு தம்பி, தங்கச்சி எனக்கு அம்மா இல்லை, அல்லது அப்பா இல்லை என்னில் அன்பு செலுத்த யாருமில்லை, வாழ்வதற்கு வழியில்லை என எண்ணுகிறீர்களா? தேவனாகிய இயேசு இருக்கிறார். அவர் உங்களோடிருந்து உங்களை நடத்துவார். நீங்கள் தொடர்ந்து ஜெபித்து அவரை பிடித்துக் கொள்ளுங்கள்.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş