Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05.04.2024
Share:

By Village Missionary Movement

Friday, 05-Apr-2024

இன்றைய தியானம்(Tamil) 05.04.2024

 

பொறுப்பு உங்கள் மேல்

 

"…சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்" - அப். 1:26

 

ஆஸ்திரேலியா நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் ஏழை விவசாய பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் மெக்ராத். சிறுவயதில் வறுமையினால் மிகவும் கஷ்டப்பட்டார். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் எப்படியாவது தனது நாட்டின் கிரிக்கெட் அணியில் சேர முயற்சித்தார். ஆனால் எதுவும் கைகூடி வரவில்லை. அப்போது தான் ஒருமுறை உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் உள்ளூர் அணிக்காக விளையாடும் ஒரு வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய பவுலிங் திறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவியாயிருந்தார். பின்பு ஆஸ்திரேலிய நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் அணியின் பட்டியலில் இடம் பிடித்து தனது பவுலிங் திறமையை வெளிப்படுத்தி பல முக்கிய போட்டிகளில் தனது அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து மூன்று முறை ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை வென்ற போட்டிகளில் இவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

 

பரி.வேதாகமத்தில் அப்போஸ்தலர் ஒன்றாம் அதிகாரத்தில் சீஷர்கள் ஒரு முடிவை எடுக்க முயற்சிக்கிறார்கள். அது என்னவெனில் யூதாஸ் என்பவன் தன் நோக்கத்தையும், இடத்தையும் இழந்து போனான். ஆகவே அவனுடைய இடத்தில் வேறொருவரை நியமிக்க வேண்டும். இதற்காக அவர்கள் ஜெபம் பண்ணி சீட்டுப் போட்டுப் பார்க்கிறார்கள். சீட்டு மத்தியா என்ற ஒரு மனிதனின் பேரில் விழுந்தது. அப்பொழுது அந்த மத்தியா பதினொரு அப்போஸ்தலருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான் என்று பார்க்கிறோம். பின்னாட்களில் அப்போஸ்தலர் செய்த எல்லாக் காரியங்களிலும் மத்தியாவின் பங்கும் இருந்தது. அப்போஸ்தலரின் சரித்திரத்தில் இவரும் இடம் பிடித்து விட்டார்.

 

நண்பர்களே, ஒரு உள்ளூர் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பயன்படுத்தின ஒரு வீரனையும், சீஷர்களுடனே சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒரு மனிதனையும் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு உங்களின் நிலை என்ன? ஏதோ ஒரு பின்னணியத்தில், ஏதோ ஒரு காலகட்டத்தில், ஏதோ ஒரு நபர் மூலமாக சுவிசேஷம் உங்களைத் தேடி வந்தது. அந்த சுவிசேஷத்தை அறியாத இலட்சக்கணக்கான மக்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள். அந்த சுவிசேஷத்தை சொல்ல வேண்டிய பொறுப்பு உங்கள் பெயரில், உங்கள் மேல் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். "சீட்டு இன்று என் பெயரில் விழுந்துள்ளது, நான் ஒரு பன்னிரெண்டாவது சீஷன்" என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் சொல்ல வேண்டும், செயல்பட வேண்டும். இந்தப் பொறுப்பை உணர்ந்தவர்களாக இன்றே புறப்பட்டுப் போய் இயேசுவின் அன்பைக் குறித்து ஜனங்களுக்குச் சொல்லுவோம்! நம்முடைய பொறுப்பை நாம் நிறைவேற்றி தேவ நாமத்தை மகிமைப்படுத்துவோம்!

- T. சங்கர் ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

இனியவளே என்ற நிகழ்ச்சி மூலம் சந்திக்கப்படும் பெண்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al