Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.04.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 04-Apr-2024

இன்றைய தியானம்(Tamil) 04.04.2024

 

என் பொக்கிஷம் எங்கே?

 

"தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்" - லூக்கா 12:21

 

ஒருவர் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு வேலை நிமித்தமாகச் சென்றார். ஒரு குறிப்பிட்ட வருடம் மாத்திரம் அங்கு தங்கி வேலை செய்யும்படி அவருக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதன்படி அவரும் அங்கே தங்கியிருந்து நன்றாக வேலை செய்தார். அதனால் கிடைக்கும் வருமானத்தில் தான் வாழ்வதற்குத் தேவையானதை மட்டும் வைத்துக் கொண்டு மீதியானதைத் தன் சொந்த நாட்டிலுள்ள தன்னுடைய வங்கிக்கணக்கில் சேர்த்து வைத்தார். ஏனென்றால் இது தன் சொந்த நாடு கிடையாது என்றும், இங்கு சேர்த்து வைப்பதால் தனக்கு எந்த ஒரு பயனும் இல்லையென்றும், தனக்கு கொடுக்கப்பட்ட காலம் முடிந்தவுடன் இங்கு வாழ முடியாது என்பதையும் உணர்ந்து செயல்பட்டார் என்பது நம்மெல்லோருக்கும் நன்கு புரிகிறது.

 

இதைப்போல பூமி என்பது யாருக்கும் நிரந்தரமல்ல. கட்டாயம் இங்கிருந்து நம் ஆத்துமா எடுத்துக் கொள்ளப்பட்டு பரலோகம் அல்லது நரகம் என்ற நித்தியமான இடத்தில் சேரும் என்ற உணர்வு நம்மெல்லாருக்குள்ளும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். ஆனால் நம்மில் பலர் இதை மறந்து இப்பூமியில் எப்போதும் இருப்போம் என்று நினைத்து ஏராளமான பொருட்களை இங்கு தங்களுக்காகவே சேர்த்து வைக்கிறோம்.

 

பரி.வேதாகமத்தில் இப்படித் தனக்காகவே சேர்த்து வைத்த ஐசுவரியமுள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் ஆத்துமாவை நோக்கி உனக்காக அநேக வருடங்களுக்கு பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி புசித்துக் குடித்து பூரிப்பாயிரு என்று சொல்லிக் கொண்டான். ஆனால் தேவனோ அவனை நோக்கி, மதிகேடனே உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். இதே கேள்வியை இன்று ஒரு வேளை தேவன் நம்மிடம் கேட்பாரானால்!

 

இவ்வுலகில் எத்தனையோ ஏழை மக்களை நாம் காண முடிகிறது. ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். மேலும் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியஸ்தராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் இருக்கிற உங்கள் சகோதரராகிய மிகவும் சிறியவர்களாயிருக்கிற இவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார்.  

 

நாம் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்துவைப்பதற்காக இது போன்ற பல வாய்ப்புகளைத் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். தேவன் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோமா? இப்பூமியை விட்டு நாம் எப்போது செல்வோம் என்பது யாருக்கும் தெரியாது நம்முடைய தேவனைத் தவிர.

- Bro. சிமியோன்

 

ஜெபக்குறிப்பு:

நமது வலைதள நிகழ்ச்சிகளில் ஜெபக்குறிப்புகள் அனுப்பும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் அற்புதம் செய்ய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş