By Village Missionary Movement
Sunday, 31-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 31.03.2024 (Kids Special)
உயிர்த்தெழுந்தாரே!
"மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்,…" - வெளி. 1:18
ஹலோ குட்டீஸ், நல்லா இருக்கீங்களா? Exam நடந்து கொண்டிருக்கிறதா? Sunday class க்கு போகணும். இயேசப்பாவுக்கு பிரியமானபடி நேரத்தை செலவிடணும். Ok வா. சரி இன்றைக்கு என்ன Day தெரியுமா? . . ஈஸ்டர். Very good. ஈஸ்டர் என்றால் இயேசு உயிரோடெழுந்த நாள். பாவம், சாபம், மரணம் எல்லாவற்றிலுமிருந்து நம்மை விடுவித்து நமக்காக சிலுவையிலே மரித்த இயேசுகிறிஸ்து வெற்றி சிறந்த நாள் . இது மனுகுலத்துக்கே சந்தோஷமான நாள்.
எங்கும் இருள் சூழ்ந்திருக்க, ஆள் நடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில், மகதலேனா மரியாள் அக்காவும் அவங்க Friendsம் இயேசுவின் கல்லறையை நோக்கி சென்றார்கள். மரித்து இரண்டு நாட்கள் ஆனாலும் இயேசுவை சிலுவையில் அறைந்ததையும் அவர் உடலிலிருந்து வடிந்த இரத்தத்தையும் அவர்களால் மறக்க முடியவில்லை. நினைத்து நினைத்து அழுதுகொண்டே போனார்கள். ஒரு பாவமும் செய்யாத இயேசு நமக்காக கோரமாய் சிலுவையில் மரித்தாரே! என்று நினைக்கும்போது அந்த இருட்டு அவங்களுக்கு பெரிசா தெரியல. இயேசுவின் சரீரத்திற்கு சுகந்த வாசனை இடுவதற்கு கல்லறைக்கருகில் சென்றுவிட்டார்கள். கல்லறை திறந்திருக்கிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். உள்ளே போய்ப் பார்த்தால் இயேசு அங்கு இல்லை. பிரகாசமான மிகவும் அழகான தேவதூதனை கண்டார்கள். அவரைப் பார்த்து பயத்திலே உறைந்து போனார்கள். உடனே தேவதூதன், "பயப்படாதீர்கள். இயேசுவைத்தானே தேடுகிறீர்கள். அவர் தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். நீங்கள் போய் இந்த செய்தியை அவரது சீஷர்களுக்கு சொல்லுங்கள்" என்றார். ஒரு பக்கம் பயம் இருந்தாலும் இயேசு உயிர்த்தெழுந்த மகிழ்ச்சி உள்ளத்தில் பொங்கி வழிந்தது. கல்லறையை விட்டு வெளியே வந்து வேகமாக ஓடினார்கள். இயேசு அவர்களுக்கு முன்னே காட்சியளித்தார். "ஐயோ என்ன இது ஆவியா?" என பயந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து,"வாழ்க"என்று வாழ்த்தினார். இயேசுவை பணிந்துகொண்டார்கள். அவரைப் பார்த்த சந்தோஷத்தில் ஓடோடிச்சென்று அழுதுகொண்டிருந்த சீஷர்களிடத்தில் இந்த நல்ல செய்தியைச் சொன்னார்கள். அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மகதலேனா மரியாள் இயேசுவின் மேல் வைத்திருந்த அன்பை அவர் மறக்கவில்லை. உயிர்த்தெழுந்தவுடன் முதலாவது இயேசுவைப் பார்க்கும் பாக்கியம் அந்த அக்காவுக்குத்தான் கிடைத்தது.
அன்பான தம்பி தங்கச்சி, இந்த உலகத்தில் எல்லா கல்லறைகளும் மூடித்தான் இருக்கின்றன. ஆனால் இயேசப்பாவோட கல்லறை மட்டும்தான் திறந்திருக்கிறது. இயேசு உயிரோடு எழுந்து விட்டார். இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார். நமக்காக உயிரையே தந்தவர். மற்ற ஆசீர்வாதங்களை தராமல் இருப்பாரா? கட்டாயம் தருவார், நீ அவரின் பிள்ளையாய் மாறினால் மட்டுமே!
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864