Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30.03.2024
Share:

By Village Missionary Movement

Saturday, 30-Mar-2024

இன்றைய தியானம்(Tamil) 30.03.2024

 

முடிந்தது

 

"...முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்" - யோவான் 19:30

 

நான் அறுபது வயதில் அவருக்காக ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தேன். இந்த வயதில் என்னை யார் ஊழியத்திற்கு அழைக்கப் போகிறார்கள் இனி நேர்மையாய் வாழ வேண்டியதுதான் என நினைத்தேன். ஆனால் எட்டு ஆண்டுகள் கழித்து திடீரென்று கிராம மிஷனெரி இயக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் எனக்கு தேவனது சித்தத்தை செய்ய இந்த வயதிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற மகிழ்ச்சி. ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் இங்கு ஊழியம் செய்து வருகிறேன். தேவனுக்கு சித்தமானால் என் ஆயுள் முடியும்வரை ஊழியத்தில் உழைக்க என்னை அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறேன்.

 

இயேசுகிறிஸ்து முடிந்தது என சொன்ன வார்த்தை பூமிக்கு பிதா தன்னை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றி முடித்ததினால் இவ்வாறு கூறுகிறார். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே என் போஜனமாயிருக்கிறது என்றார். அவ்வாறு வாழ்ந்து ஜீவ பலியாக தன்னை ஒப்படைத்து, செய்து முடித்தார். "முடிந்தது" என்ற வார்த்தையை அவர் சொல்லுவதற்கு முன் திரை சீலை இரண்டாகக் கிழிந்தது. பிதாவோடு மனித குலம் ஒன்றிணைந்ததைக் குறிக்கிறது. 

 

இவ்விதமாய், மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும் அவரை உன் வாலிபப் பிராயத்திலே நினை (பிரசங்கி 12:7) என்று கூறுகிறார். ஏனென்றால் நம் ஒவ்வொரு கிரியையும் தேவன் ஆராய்ந்து அறிகிறவராயிருக்கிறார். அதுமட்டுமல்ல பிரசங்கி 12:14ல் ஒவ்வொரு கிரியையும் அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும் நியாயத்திலே கொண்டு வருவார் என்கிறார். ஆதலால் தேவனைத் துணையாய் கொண்டு ஒவ்வொரு நாளும் அவரின் இரத்தத்தினால் கழுவப்பட்டு தேவனின் திட்டத்தை நாம் நிறைவேற்றி நம்பிக்கையோடு முன்னேறி, பவுலைப் போல் என் ஓட்டத்தை முடித்தேன் என ஜெயகம்பீரமாய் சொல்ல முடியும்.

 

இதை வாசிக்கும் அன்பரே, உங்களை தேவன் இவ்வுலகில் வைத்திருப்பதற்கு ஒரு நோக்கமுண்டு. அந்த நோக்கத்தை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். தேவன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார். நான் தேவசித்தத்திற்கு என்னை அர்ப்பணித்த போது இதுவரை அதை நிறைவேற்ற கிருபை செய்த தேவன் உங்களுக்கும் கிருபை செய்வார். கிறிஸ்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தது போல், பவுல் ஓட்டத்தை முடித்தேன் என சொன்னது போல், நாமும் ஜெயமுடன் ஓட்டத்தை முடிக்கலாம்.

- Bro. ஜோசப் கனகராஜ்

 

ஜெபக்குறிப்பு:

நமது மீடியா ஊழியங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al