Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26.03.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 26-Mar-2024

இன்றைய தியானம்(Tamil) 26.03.2024

 

பதற்றப்படாதே

 

"…விசுவாசிக்கிறவன் பதறான்." - ஏசாயா 28:16

 

ஜெட் விமானம் ஒன்றில் விமானி, பள்ளி மாணவன் ஒருவன் மற்றும் ஒரு போதகர் என மூவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். நடுவானில் என்ஜின் கோளாறு காரணமாக விமானம் பழுதடைந்துபோனது. இன்னும் சற்றுநேரத்தில் பெரியதொரு விபத்தை சந்திக்கப் போகிறோம் என்பதை அறிந்த விமானி நிலைமையை மற்ற இரண்டு பேரிடமும் எடுத்துக் கூறினார். மேலும் விமானத்தில் இரண்டு பாராசூட் மாத்திரமே உள்ளது. ஆனால் இங்கு நாம் மூன்று பேர் இருக்கிறோமே என விமானி சொல்லிக் கொண்டிருக்கும்போதே போதகர் வேகமாக ஒன்றை எடுத்துக் கொண்டு விமானத்திலிருந்து கீழே குதித்தார்.

 

இதை சற்றும் எதிர்பாராத விமானி அதிர்ச்சியுற்றவராய் அம்மாணவனைப் பார்த்து, "பரவாயில்லை தம்பி இன்னொரு பாராசூட் உள்ளதே. அதை எடுத்து நீ உயிர் பிழைத்துக்கொள். நீ இளவயதுள்ளவன், நீ வாழ வேண்டியவன்" என்று கூறினார். இதைக் கேட்ட மாணவன், "இல்லை ஐயா, நாம் இரண்டுபேருமே உயிர் பிழைத்துக்கொள்ளலாம்" என்றான். "அது எப்படி கூடும்? நம்மிடம் ஒரு பாராசூட் தானே உள்ளது." என்றார். மாணவன் சற்றும் சலனமின்றி, "போதகர் குதிக்கிற வேகத்தில் பாராசூட்டை விட்டுவிட்டு, என் School Bag ஐ தூக்கிக்கொண்டு அவசரமாய் கீழே குதித்து விட்டார். ஆகவே நம்ம ரெண்டு பேருக்கும் பாராசூட் உள்ளது" என கூறினான்.  

 

மேலே வாசித்த சம்பவம் வேடிக்கையாக தோன்றினாலும் இன்று நம்மில் அநேகர் அவசர பேர்வழியாய் தான் காணப்படுகிறோம். கிறிஸ்தவ வாழ்க்கையில் விசுவாசமும், பொறுமையும் நம்மிடம் இல்லையென்றால் நம் பிரயாணம் தடைபடுவது உறுதியாக உள்ளது. இன்றைய வேதபகுதியை வாசிக்கும்போது, தங்களது படகில் இயேசுவானவர் இருந்தும், சீஷர்கள்,"ஐயோ மடிந்து போகிறோமே" என அபயக்குரல் எழுப்பினார்கள். இவர்களுடைய நம்பிக்கையற்ற தன்மையை இயேசு கடிந்துகொள்கிறதை வாசிக்கிறோம். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்றும், அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள் என்றும் (எபி. 11:6,3:12) வேதாகமம் நமக்கு புத்தி சொல்கிறது. ஆகவே இதை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் விசுவாசத்தில் உறுதியாயிருப்போம். தேவன் உங்களை வழிநடத்துவாராக!

- P. ஜேக்கப் சங்கர்.

 

ஜெபக்குறிப்பு: 

நம்முடைய அலுவலகப் பணியாளர்களுக்காக ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al