By Village Missionary Movement
Sunday, 11-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 11-04-2021 (Kids Special)
வீட்டிற்கு ராஜா
“சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்...” – லூக்கா 18:1
ஒரு அழகிய குட்டி கிராமம் அது. கிராமத்தை சுற்றி எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறத்தில் குட்டிகுட்டி மேகங்கள் முகவரி தேடி அலைவதைப்போல வெடித்த பஞ்சுகள் பறந்து கொண்டிருந்தன. கண்ணைக் கவரக்கூடிய நிறத்தில் பச்சை, சிகப்பு என கொத்து கொத்தாய் மிளகாய் காய்த்து குலுங்கிய தோட்டங்கள். அந்த கிராமத்தில் எப்போதும் ஜாலியாக இருக்கும் ராஜா என்ற ஒரு குட்டி தம்பி தனது பெற்றோருடன் வசித்து வந்தான். அவனை அவன் பெற்றோர் பல வருடங்களுக்குப்பின் பொருத்தனை பண்ணி பெற்றெடுத்தனர். அவன் பேருக்கு ஏற்றவாறு செல்ல பிள்ளையாக வாழ்ந்து வந்தான். ஊருக்கே செல்லமாக வளர்ந்த அவனுக்குள் பல முரட்டுக்குணங்கள் வர ஆரம்பித்தது. சின்னவயதிலேயே குடி, போதை பழக்கம் மற்றும் பல பாவ காரியத்திற்கு அடிமையானான். சண்டை என்று வந்துவிட்டால் பெரியவர்கள் என்று கூட பார்க்கமாட்டான், அவர்களைக் கொன்றுபோடவும் தயங்கமாட்டான். இப்படியாய் இந்த சின்ன வயதிலேயே துன்மார்க்கமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
பெரியவனாகியும் அவனால் அந்த பாவ பழக்கத்தை விட முடியவில்லை. அவன் பெற்றோர்கள் அவனை நினைத்து மிகவும் வேதனைப்படுவார்கள். அவன் தாயார் அவனுக்காக அனுதினமும் ஜெபிப்பார்கள். அவர்களது கண்ணீரின் ஜெபத்தைக் கேட்ட கர்த்தர் ஒருநாள் இரவு அவனைத் தொட்டார். அன்றையிலிருந்து அவனுக்குள் ஒரு பெரிய போராட்டம் நான் ஏன் குடிக்க வேண்டும்? ஏன் இப்படிப்பட்ட பாவ பழக்கத்தில் இன்னும் வாழ வேண்டும் என்று பல கேள்விகள் அவனுக்குள் எழும்பியது. பாவ உணர்வு அடைந்தவனாய் தனது வாழ்க்கையை இயேசுவுக்கு கொடுத்தான். தனது கிராமத்தை விட்டு வேறே நாட்டிற்கு சென்று நல்ல வேலை செய்து வந்தான். அங்குள்ள ஆலயத்திற்கு செல்ல ஆரம்பித்தான். தேவ அன்பினால் அளவில்லாமல் நிரப்பப்பட்டான். இயேசுவின் அன்பால் நிரப்பப்பட்ட அவனால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு பயித்தியக்காரனைப்போல பசியை மறந்து, தூக்கத்தை மறந்து என்னை மாற்றிய இயேசுவுக்காக நான் எதையாகிலும் செய்ய வேண்டும், ஒரு நாளில் ஒருவருக்காவது சுவிசேஷம் அறிவித்திட வேண்டும் என்ற ஏக்கம் அவனுக்குள் அதிகமாய் அதிகரித்தது. வேலையை முடித்து களைப்படைந்தவனாய் தனது அறைக்கு வந்தாலும் அவனால் சும்மா இருக்க முடியவில்லை. தேவையுள்ள மக்களை தேடி சுவிசேஷம் அறிவித்தான். தற்போது வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக மிஷனெரி பணிக்கு தன்னை அர்ப்பணித்து தேவ பணியை செய்து வருகிறான்.
தம்பி தங்கச்சி, உன் குடும்பத்தில் யாராவது இப்படிப்பட்ட பாவ வாழ்க்கையில் வாழ்ந்து வருவார்களானால் அவர்களுக்காக இயேசப்பாவிடம் தொடர்ந்து ஜெபிப்பாயானால் அவர்கள் வாழ்க்கையையும் மாற்ற இயேசப்பா ஆயத்தமாயிருக்கிறார். Ok.
- Mrs. சாராள் சுபாஷ்
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250