By Village Missionary Movement
Sunday, 24-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 24.03.2024
டேவிட் பிரெனாய்ட்
"கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;…" - சங்கீதம் 121:7
என்ன குட்டீஸ் ஒவ்வொரு வாரமும் கதை கேட்குறீங்க. உங்களுக்கு useful la இருக்குமென்று நினைக்கிறேன். Ok இன்றைக்கு ஒரு மிஷனெரி story கேட்கலாமா?
அமெரிக்க தேசத்தில் பிறந்த பிரெனாய்ட் சின்ன வயதிலேயே தகப்பனை இழந்தார். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட இவர் தனது 25 ஆவது வயதில் அமெரிக்காவிற்கு மிஷனெரியாய் அனுப்பப்பட்டார். T.B. வியாதியினால் பாதிக்கப்பட்டு இரத்த வாந்தி எடுத்தாலும் தனக்குள் இருந்த கிறிஸ்துவின் அன்பை செவ்விந்தியர்களுக்கு அறிவிக்க துடியாய் துடித்தார். குட்டிச் செல்லங்களே, இயேசுவை அறிந்த நீங்களும் அவரைப்பற்றி அறியாதவர்களுக்குச் சொல்ல ஆசையாய் இருக்க வேண்டும் Ok வா.
பிரெனாய்ட் அண்ணன் செவ்விந்தியர்கள் வசிக்கும் ஒரு கிராமத்தில் கூடாரம் போட்டு தங்கியிருந்தார். அதனை மக்கள் அவரை கொன்றுவிடலாம் என்று நினைத்து மெதுவாக அந்த கூடாரத்திற்கு சென்றார்கள். அவர்கள் எட்டிப் பார்த்த போது முழங்காலில் நின்று ஜெபித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த மக்கள், நாம் இவரைக் கொல்ல வேண்டாம், அந்த பாம்பே அவரை கொன்று விடும் என நினைத்து என்ன நடக்கப் போகிறதோ என காத்துக் கொண்டிருந்தார்கள். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று சொல்லுவார்கள். அப்படித்தானே குட்டீஸ். நடந்தது என்ன தெரியுமா? பாம்பு அப்படியே நகர்ந்து வந்த வழியே சென்று விட்டது. பிரெனாய்ட் அண்ணனை கொல்ல நினைத்த மக்களும் ஆச்சரியப்பட்டு நிச்சயமாகவே இவர் தேவமனிதர் தான் என நினைத்து அவருக்கு நண்பர்களானார்கள். அதுமட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவை இரட்சகராய் ஏற்றுக் கொண்டார்கள். அந்த கிராம மக்கள் அவரை கொலை செய்ய வந்தது, பாம்பு பின்னாக நின்றது எதுவும் பிரெனாய்ட் அண்ணனுக்கு தெரியாது. ஆனால், காக்கின்ற தேவன் அவரோடு இருந்து அவரை பாதுகாத்தார்.
அன்பு தம்பி, தங்கைகளே நீங்களும் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கும் போது எந்த தீமையும் அணுகாதபடி காக்கின்ற தேவனாய் இருந்து நித்தமும் நடத்துவார். பயப்படாதீங்க, கலங்காதீங்க. ஜெபம் பண்ணுங்க. Ok வா. Bye.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864