By Village Missionary Movement
Friday, 22-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 22.03.2024
கண்களைத் திறந்தருளும்
"…கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்;…" - 2 இராஜாக்கள் 6:17
செருப்புத் தைத்துக்கொண்டிருந்த வில்லியம் கேரி தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் முழங்கால்படியிட்டு இந்திய வரைபடத்தை வைத்து பாரத்துடன் ஜெபித்துக்கொண்டே இருப்பார். இந்தியாவைக் குறித்த பாரம் அவருடைய இருதயத்தை அதிகமதிகமாய் நெருக்கிக்கொண்டே இருந்தது. இந்தியாவிற்கு மிஷனெரியாக யார் செல்வார்? என்ற அழைப்பைக் கேட்டவுடன் இவர் தன்னையே அர்ப்பணித்து இந்தியாவிற்கு மிஷனெரியாக செல்லும்படி முன்வந்தார். எத்தனையோ தடைகள், போராட்டங்கள், இழப்புகள் மத்தியிலும் வைராக்கியமாய் இந்தியாவிலே ஊழியம் செய்து வந்தார். அவருடைய இருதயத்தின் கூற்று, "தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்; தேவனுக்காக பெரிய காரியங்களை செய்" என்பதே. இவருக்கு இந்தியாவைக் குறித்து வாலிப வயதிலிருந்த பாரம் இறுதி மூச்சு வரை இந்தியாவிலேயே ஊழியம் செய்ய வைத்தது. வில்லியம் கேரியின் பிரகாசமுள்ள மனக்கண்கள் இந்தியாவின் மீது திருப்பப்பட்டதின் விளைவு இன்று நீங்களும் நானும் கிறிஸ்துவை அறிந்தவர்களாய் இருக்கிறோம்.
வேதத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்தான். இராணுவமும், குதிரைகளும், இரதங்களும் பட்டணத்தைச் சுற்றி இருக்கிறதை கண்ட எலிசாவின் வேலைக்காரன், "ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்" என்று அலறுகிறான். அப்பொழுது எலிசா வேலைக்காரனின் கண்களைத் திறந்தருளும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணியபொழுது எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை கண்டான். அதற்கு எலிசா தீர்க்கதரிசி வேலைக்காரனைப் பார்த்து, "பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்" என்பதை அந்த நாளில் உணர்ந்து கொள்ள வேலைக்காரனின் கண்கள் திறக்கப்பட்டன.
இதை வாசித்துக்கொண்டிருக்கிற அன்பானவர்களே! நீங்களும் உங்களுடைய வாழ்வில் கடந்து வருகிற போராட்டங்கள், பிரச்சனைகள், நிந்தைகள், பெலவீனங்கள், அவமானங்கள் எல்லாவற்றையும் சரீர பிரகாரமான கண்களினால் உற்று நோக்குவீர்களானால் சோர்ந்து போவீர்கள். தேவ ஒத்தாசையுடன் விசுவாச கண்களினால் உங்கள் பிரச்சனைகளை உற்று நோக்குவீர்களானால் தேவன் பெரியவராய் எழுந்தருளுவார். தேவன் உங்கள் இருதயக் கண்களை திறந்தருளும்படி ஒவ்வொரு நாளும் ஜெபியுங்கள். கண்கள் திறக்கப்பட்டவர்களாய் பிரச்சனையை தேவனிடம் சொல்லும் முன், தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை பிரச்சனையிடம் சொல்லுவோம். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அது பனியைப்போல மறையச்செய்யும் இயேசுவிடம் விசுவாசம் வைப்போம். தேவன் பெரிய காரியங்களைச் செய்வாராக!
- Mrs. ரூபி அருண்
ஜெபக்குறிப்பு:
நமது மோட்சப்பயணம் பத்திரிக்கை மூலம் சந்திக்கப்படும் நபர்களுக்காக, இதனுடைய பிரிண்டிங் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864