Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19.03.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 19-Mar-2024

இன்றைய தியானம்(Tamil) 19.03.2024

 

பெலவீனம் தடையல்ல 

 

"…பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்…" - 2 கொரி. 12:9

 

இங்கிலாந்து தேசத்திலே ஒரு பெண் ஏழு பிள்ளைகளை சுகமாய் பெற்றார்கள். 8வது கரு உண்டானது முதல் பெலவீனப்பட்டார்கள். பல வியாதிகளால் அவதிப்பட்டு ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த குழந்தையும் பெலவீனமாக பிறந்து ஆஸ்துமா வியாதியினால் மிகவும் கஷ்டப்பட்டது. இதற்கென பல மருந்துகள் சாப்பிட்டும் வியாதி குணமாகவில்லை. ஆனால் அப்பிள்ளை வளர்ந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, ஆண்டவருக்காய் வைராக்கியமாய் நின்றார். ஒருநாள் மூச்சுவிடக் கஷ்டப்பட்டபோது தட்டுத்தடுமாறி தன் டைரியை எடுத்து "அவருடைய நாமத்தைக் கூறி அறிவிக்க என்னைக் காப்பார் என நம்புகிறேன்" என எழுதினார். அதே போல் தேவன் அவரை காத்தார். இவர்தான் ஆர்தர் மர்காஷியஸ். இவர் தமிழ்நாட்டில் நாசரேத் பகுதிக்கு வந்து பணியாற்றியவர்.

 

வேதத்திலும்கூட பவுல் பெலவீனப்பட்ட போது பெலவீனம் மாற ஜெபிக்கிறார். தேவனோ உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். என் பெலவீனத்தைக் குறித்து மேன்மை பாராட்டுகிறேன் என சொல்லும் படி பெலவீனத்திலும் தேவன் உடனிருந்து நடத்துகிறார். இவர் அதிக பெலவீனத்தோடு அதிக பாடுகள் பட்டவர். ஆயினும் அதிக திருச்சபையை உருவாக்கியவர். அநேக இடங்களுக்கு சென்று கிறிஸ்துவின் பணியை செய்தவர். அநேக நிருபங்களை எழுதியவர். பெலவீனம் ஒரு போதும் கிறிஸ்துவின் பணிக்கு தடையல்ல. அப்படி தடையாக எண்ணி கிறிஸ்துவை விட்டு பின்வாங்கி இருந்தீர்களானால் இன்று மீண்டும் உங்களை அர்ப்பணியுங்கள். பெலவீனம் இருந்தாலும் தொடர்ந்து கிறிஸ்துவுக்காக செயல்படும் போது தம் கிருபையால் மூடி காத்து நடத்துவார். நம்மைக் கொண்டு அதிசயங்களைச் செய்வார்.

 

இதை வாசிக்கும் அன்புக்குரியவர்களே, நீங்கள் உங்கள் பெலவீனத்தைப் பார்க்கும் போது அது பெரிதாகத் தெரியும். உங்களுக்கு வாக்களித்து நடத்தும் தேவனைப் பார்த்தால் உங்கள் பெலவீனங்கள் ஒன்றுமில்லாதது போல் தெரியும். நீங்களும் முன்னோக்கி செல்ல முடியும். அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைக்கிறவர். பயந்த கிதியோனைக் கொண்டு பயங்கரமான காரியங்களை செய்தவர், வாலிபனான யோசுவாவை திடப்படுத்தி "பலங்கொண்டு திடமனதாயிரு" என்று லட்சங்களை வழிநடத்த பெலன் தந்தவர், பெலவீனப்பட்ட பவுலைப் பயன்படுத்தியவர் இன்று உங்களையும் பயன்படுத்துவார். பெலவீனத்தைக் கண்டு சோர்ந்து முடங்கிவிடாதீர்கள். கிறிஸ்துவைப் பார்த்து அவர் கிருபையைச் சார்ந்து முன்னேறுங்கள். கர்த்தர் உங்களைக் கொண்டும் பெரிய காரியம் செய்வார். ஆமென்!!

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு: 

இந்த வருடம் 313 தாலுகாக்களிலும் சிறுவர் முகாம்கள் நடத்தப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al