By Village Missionary Movement
Saturday, 16-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 16.03.2024
இருதயத்தின் ஆழத்திலிருந்து . . .
"…நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்" - 1 கொரிந்தியர் 14:15
ஒரு கிறிஸ்தவ வாலிப சகோதரன் தன்னுடைய கம்பெனியில் இரவு நேர வேலையை பார்த்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவர் பாடின பாடலாவது: சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்தே செல்லுவேன், சாத்தானின் சகல வலிமையை வெல்ல அதிகாரம் எனக்குண்டு என்று! அவர் பாடிக் கொண்டே செல்லும் வழியில் திடீரென்று எங்கிருந்தோ ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. உடனே அந்த வாலிபன் சைக்கிளை மிக வேகமாக அழுத்தி மூச்சு வாங்க வீடு போய்ச் சேர்ந்தான். இது ஒரு வேளை நமக்கு சிரிப்பை வரவழைத்தாலும் நாம் பாடுகின்ற பாட்டு இருதயத்தின் ஆழத்திலிருந்து பாடுகிறோமா? என சிந்திப்போம்.
அப்.பவுல் கொரிந்து சபைக்கு எழுதும் போது இப்படியாக எழுதுகிறார், "நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்" என்று! அப்படி என்றால் நம் பாடல்களில் ஆவியும், கருத்தும் இருக்க வேண்டும். இன்று நாம் ஆலய ஆராதனைகளிலும், ஜெபக்கூட்டங்களிலும், பாவங்களை அறிக்கை செய்கிற, நன்றி செலுத்தும் விதமாக இன்னும் இப்படியாக அநேக பாடல்களை பாடுகிறோம். ஆனால் என்ன ஒரு பரிதாபம்! நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் நாம் பாடுவது போல் செயல்பட தவறி விடுகிறோம்.
சமீபத்தில் ஒரு பக்தன் எழுதிய கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அதில் பாடல்களில் கூறுவதும், நடைமுறைப்படுத்துவதும் எதிர்மாறாக உள்ளது என்றும் கிறிஸ்தவர்கள் பொய்யைப் பாடலாகப் பாடுகிறார்கள் என்றும எழுதியிருந்தார். உதாரணமாக இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன் எனப் பாடுகிறோம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ஆண்டவரின் பணிக்கு பிடித்துத் தள்ள வேண்டியதாயிருக்கிறது.
பிரியமானவர்களே! நாம் பாடுவதைப் போல வாழ முயற்சி செய்வோம். நாம் சில காலங்களுக்கு முன்பு வேதபுத்தகம், பாட்டு புத்தகம், குறிப்பேடு என இவைகளை நம் கையில் பிடித்துக் கொண்டு ஆலயம் சென்றோம். நவீன உலகம் அதாவது Smart World என்று ஒரு விரல் நுனியில் இன்று எல்லாம், எதற்கு எடுத்தாலும் Mobile phone ஐப் பயன்படுத்துகிறோம். சபைகளில் இன்று வாசிக்கப்படுகின்ற மியூசிக் மற்றும் ஒளி, ஒலிக்காக நாம் பாட வேண்டாம். நாம் பாடல் பாடுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் நம் ஆத்துமாவை ஊடுருவிச் செல்லட்டும். நம்முடைய பாடல் மூலமாக நம் சிந்தனை தேவனண்டை திருப்பப்படட்டும். நம் அருகில் உள்ளோரையும் உற்சாகப்படுத்தட்டும். எனவே, நம்முடைய ஜீவன் நமக்கு இருக்கும் வரை நமக்கு ஜீவன் தந்தவரை இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜீவனோடு பாடுவோம்!!
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
நம்மிடத்தில் பயிற்சியில் உள்ள இளம் மிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864