Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15.03.2024
Share:

By Village Missionary Movement

Friday, 15-Mar-2024

இன்றைய தியானம்(Tamil) 15.03.2024

 

வேதம் சத்தியம்     

 

"உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்" - சங்கீதம் 119:97

 

வேதாகமம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படாத காலத்தில் எல்லோரும் வேதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் டிண்டேல். ரோமன் கத்தோலிக்க சபையின் சட்டப்படி போதகர்களின் கையில் மட்டும்தான் வேதப்புத்தகம் இருந்தது. மேலும் பாவமன்னிப்புச்சீட்டு, விக்கிரக வழிபாடு, போதகர்களின் ஆடம்பர வாழ்க்கை போன்ற வேதத்துக்கு விரோதமான காரியங்கள் தலைவிரித்தாடியது. சாதாரண மக்களும் வேதத்தைப் படிக்க வேண்டுமென்ற விருப்பத்தில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்க்க விரும்பினார் டிண்டேல்.

 

1524ம் ஆண்டில் ஜெர்மனி சென்று மார்ட்டின் லூத்தரை சந்தித்து அங்கேயே மொழிபெயர்க்க ஆரம்பித்தார். மொழி தெரியாத அவர் ஒரே வருடத்தில் மிகுந்த கடின உழைப்புடன் சிறப்பாய்க் கற்றுத் தேர்ந்தார். 1525ம் ஆண்டு ஜெர்மனியில் தான் மொழி பெயர்த்த ஆங்கில வேதாகமத்தை வெளியிட்டார். 1526ம் ஆண்டு ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட வேதாகமங்களை இங்கிலாந்திற்கு கொண்டு வந்தார். அதை அறிந்த இங்கிலாந்து அரசாங்கம் இது கிறிஸ்தவத்திற்கு எதிரானது என அவற்றைத் தீயிலிட்டு எரித்தது.

 

1528ல் டிண்டேல் அரசாங்கத்திற்கு எதிரானவர் என அறிவிக்கப்பட்டார். 1530ல் மன்னன் எட்டாம் ஹென்றி அவரை கைது செய்ய முயற்சித்தான். ஐந்து வருடம் தலைமறைவாயிருந்த டிண்டேல், நண்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்குள்ளானார். 1536வது வருடம் அக்டோபம் மாதம் 6ம் தேதி குரல்வளை நெரிக்கப்பட்டு, மரத்தில் கட்டி, உயிருடன் எரிக்கப்பட்டார். அப்பொழுது டிண்டேல் அவர்கள் சொன்ன வாசகம், "தேவனே இங்கிலாந்து அரசின் கண்களை திறந்தருளும்" இந்த ஜெபம் கேட்கப்பட்டது. அவர் இறந்து மூன்று வருடங்களுக்குப் பிறகு, இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றியாலேயே வேதாகமம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. வேதாகத்திற்காக டிண்டேலைப் போல எத்தனை பேர் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

 

எனக்கன்பானவர்களே, நம் கைகளிலிருக்கும் வேதாகமத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? தினந்தோறும் வேதத்தை நேசித்து, வாசித்து, சுவாசித்து, அனுபவித்து அதை நன்கு ருசித்தவர்களாக வாழ வேண்டும். வேதத்தை நாள்தோறும் அப்பியாசித்து, நம்மை சுற்றியிருக்கும் இடமெல்லாம் வசனங்களை விதைக்கிறவர்களாக வாழ வேண்டும். எரேமியாவைப் போல் உமது வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன், உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இதயத்துக்கு மகிழ்ச்சியாயிருந்தது என சாட்சி சொல்லி வசனத்தின்படி வாழ தேவன் கிருபை செய்வாராக! ஆமென்!!

- Mrs. சரோஜா மோகன்தாஸ்

 

ஜெபக்குறிப்பு: 

நமது வளாகத்தில் நடைபெறும் டியூசன் சென்டர் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இயேசுவின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al