By Village Missionary Movement
Sunday, 10-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 10.03.2024
உருளைக்கிழங்கும் பிளாஸ்டிக் பையும்
"…கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" - எபேசியர் 4:32
ஹலோ குட்டீஸ் எப்படி இருக்கீங்க. நல்லா இருக்கிறீங்களா? தினமும் ஸ்கூலுக்கு போறீங்களா? ஆமா குட்டீஸ் உங்களுக்கு என்னென்ன விளையாட்டெல்லாம் பிடிக்கும். ம். . ம் . . . உங்க ஸ்கூல்ல, உங்க தெருவுல உங்க நண்பர்களோடு ஜாலியா விளையாடுவீங்க அப்படித்தானே.
உங்களைப் போலத்தான் ரியா படித்த ஸ்கூல்லையும் பெரிய மைதானம். அங்கு எல்லா மாணவர்களும் ஜாலியா, சந்தோஷமா பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் ஒற்றுமையாக விளையாடிக் கொண்டிருந்தாங்க. நாளடைவில் சண்டைபோட்டு தனித்தனி குரூப்பாக பிரிய ஆரம்பிச்சிட்டாங்க. இது அங்குள்ள ஆசிரியர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இவர்களையெல்லாம் ஒன்று சேர்க்க நினைத்த ஆசிரியர், எல்லோரையும் அழைத்து நாளை பள்ளிக்கு வரும்போது நீங்கள் அனைவரும் ஒரு சாக்குப் பையில் உருளைக்கிழங்கும், ஒரு பிளாஸ்டிக் கவரையும் கொண்டு வாருங்கள் என்றார். மாணவர்கள் அப்படியே கொண்டு வந்தார்கள்.
இப்பொழுது ஆசிரியர் அவர்களை பார்த்து நீங்கள் யார்கூடவெல்லாம் சண்டையோ, யாரையெல்லாம் மன்னிக்க மறுக்கிறீர்களோ அவர்கள் பெயர்களை இந்த உருளைக்கிழங்கில் எழுதி இந்த பிளாஸ்டிக் பையில் போடுங்கள் என்றார். மாணவர்களும் யோசித்து நேரம் எடுத்து எழுதிப்போட்டார்கள். சாக்குப் பையிலுள்ள கிழங்கு குறைந்தது. பிளாஸ்டிக் பை நிறைந்தது. இப்பொழுது யாரை மன்னிக்க நினைக்கிறீர்களோ அவர்கள் பெயருள்ள கிழங்கை எடுத்து வெளியே போட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் தினமும் பள்ளிக்கு வரும்போதும் போகும் போதும் இந்த உருளைக்கிழங்கு கவரை சுமந்து செல்ல வேண்டும் என்றார். மன்னிக்க மனதில்லாத மாணவர்கள் கவரை பள்ளிக்கு சுமந்து கொண்டு செல்வதும், வருவதுமாயிருந்தார்கள. கொஞ்ச நாளில் உருளைக்கிழங்கு அழுகி நாற்றமெடுத்தது. யாரும் அவர்கள் பக்கத்தில் கூட வரமறுத்தார்கள். மேலும் எல்லோரும் இவர்களைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தார்கள். இதைக்கண்டு மாணவர்கள் நாற்றமெடுத்த கிழங்கை தூக்கி வீசிவிட்டு எல்லோரையும் மன்னித்து சமாதானமாய் முன்பு போல் விளையாடினார்கள்.
அன்பு தம்பி, தங்கச்சி நாமும் மற்றவர்களை மன்னிக்கவில்லையென்றால் அவர்கள் மீது இன்னும் மனக்கசப்பு, பகைமை, கோபம் என்று நமக்குள் அநேக பாவங்கள் பெருகிக் கொண்டேயிருந்தால் நம்ம வாழ்க்கையையும் நாறிப்போக வைத்துவிடும். எனவே இயேசப்பா எப்படி சிலுவையில் தொங்கிய போதும் தன்னை அடித்தவர்களையும், அவமானப்படுத்தியவர்களையும் தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களையும் மன்னித்தாரோ அதுபோல நீங்களும் மாற வேண்டும். இதைதான் இயேசப்பா உங்ககிட்ட எதிர்பார்க்கிறார். ஆகவே இயேசப்பா எதிர்பார்ப்பை நிறைவேற்றி அவரை சந்தோஷப் படுத்துவீங்களா?
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864