Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.03.2024
Share:

By Village Missionary Movement

Friday, 08-Mar-2024

இன்றைய தியானம்(Tamil) 08.03.2024

 

தாழ்மை

 

"கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." - யாக்கோபு 4:10

 

ஒருமுறை சாதுசுந்தர்சிங் இங்கிலாந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு சகோதரி "உமக்கென்ன, நீர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின், உமக்கு எவ்வளவு வரவேற்பு, எவ்வளவு புகழ்" என்று அவரிடம் கூறினார்கள். அப்போது அவர் சொன்னார், இயேசுகிறிஸ்து ஏறிச் சென்ற கழுதையாகவே நான் என்னை நினைக்கிறேன். அன்று கிறிஸ்துவை சுமந்த கழுதை தனக்குத்தான் மக்கள் வரவேற்பளிக்கிறார்கள், தனக்குத்தான் மகிமை செலுத்துகிறார்கள் என்று நினைத்திருந்தால் அது எத்தனை முட்டாள்தனமோ அதுபோலத்தான் இப்போது கிடைக்கிற புகழ் எல்லாம் எனக்குத்தான் என்று நான் நினைத்தால் நானும் ஒரு முட்டாளாகத்தான் இருப்பேன். கிறிஸ்து எனக்குள் இல்லாவிட்டால் நான் வெறும் கழுதைதான்" என்று கூறினாராம்! என்ன ஒரு தாழ்மை, பாருங்கள்!

 

வேதத்தில் யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமணை அண்டையில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. ஆகாபை கர்த்தர் ஆசீர்வதித்து நல்ல வசதிகளை கொடுத்து இருந்தார். ஆனால் ஆகாப் பொருளாசை உடையவராய் தனக்குள்ளது போதும் என்று எண்ணாமல் அருகிலுள்ள நாபோத்தின் திராட்சத் தோட்டத்தை அடைய விரும்பினான். ஆனால் நாபோத் தன்னுடைய திராட்சைத்தோட்டம் தனக்கு பிதாக்கள் அருளின சுதந்திரம் என தர மறுக்கிறான். ஆகாபின் மனைவியாகிய யேசபேலும் ஆகாபின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல நாபோத் மேல் பொய் சாட்சியை ஏற்படுத்தி அவனை கல்லெறிந்து கொன்றார்கள். அந்த சூழலில் தீர்க்கதரியாகிய எலியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகி எலியாவால் ஆகாப் எச்சரிக்கப்படுகிறார். ஆகாபின் காரியமெல்லாம் தவறானது, அநீதியானது. ஆனால் தாழ்மையாய் நடந்து கொண்டதை அறிந்த கர்த்தர் ஆகாபுக்கு வரவிருந்த தண்டனை அவன் குமாரனின் நாட்களில் வரும் என கண்டித்தார்.

 

பிரியமானவர்களே, தாழ்மை என்கிற குணம் கிறிஸ்தவர்கள் எல்லோரிடமும் காணப்பட வேண்டிய ஒன்று. சாதாரண விசுவாசி தொடங்கி எவ்வளவு பெரிய ஊழியக்காரராக இருந்தாலும் இருக்க வேண்டிய ஒன்று. ஆண்டவராகிய இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில் தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவி தம்முடைய தாழ்மையை வெளிப்படுத்தினார். யாரிடமும் நாம் நம்முடைய ஈகோவை காண்பிக்காமல் தாழ்மையாய் இருப்போம். அவர்கள் நம்முடைய வயதில் சிறியவர்களாக, பெரியவர்களாகவும் கூட இருக்கலாம். ஆண்டவருடைய ஈடு, இணையற்ற கிருபை வேண்டுமானால் இன்றே நம்மை அவருக்கு முன்பாக தாழ்த்துவோம். கிருபைகளை பெற்றிடுவோம். தாழ்த்துவதற்கு தாமதிக்க வேண்டாம்!!

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

மருத்துவமனை ஊழியங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொடுத்து உதவும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al